கிச்சன் ராணி யோகாம்பாள் சுந்தர்! பாடி சேமிங்! சோகம் நிறைந்த மறுபக்கம்! இதுவும் கடந்து போனது எப்படி?
சென்னை: சமையல் கலைஞரும் யூடியூப் பிரபலமுமான யோகாம்பாள் சுந்தரின் மறுபக்கம் தெரியுமா? சோகங்கள் நிறைந்த அந்த தருணங்களை எத்தனை மன தைரியத்துடன் கடந்து சென்றார்.
சமையல் என்பது ஒரு கலை! அதை மன நிறைவுடனும் சந்தோஷத்துடனும் செய்தால் அந்த சமையல் நன்றாக இருக்கும். சாப்பிடுவோரும் திருப்தியாக சாப்பிடுவார்கள். வயிறு நிறைய முழு மனதிருப்தியுடன் சாப்பாடு போடுவது என்பது மிக பெரிய வரம்தான்.

அதிலும் தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது, தனது கைப்பக்குவத்தை வேறொருவருக்கு சொல்வது என்பதும் நல்ல விஷயம்தான். அந்த வேலையைத்தான் யோகாம்பாள் சுந்தர் என்பவர் கிட்டதட்ட 2017ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்.
Yogambal Sundar என்ற யூடியூப் பக்கத்திற்கு 6.13 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அவர் இதுவரை 956 வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இவர் தனது வெற்றி குறித்தும் அது எப்படி சாத்தியம் ஆனது என்பது குறித்து பிஹைண்ட்வுட் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் நான் நன்றாக சமைப்பேன் என்பது என் உறவினர்கள், நண்பர்கள் என 2000 பேருக்கு தெரியும்.
அப்போது 2016 ஆம் ஆண்டு புதுயுகம் டிவியில் சமையல் நிகழ்ச்சிக்கு நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களா என எனது சித்தப்பாவின் மருமகள் என்னிடம் கேட்டார். நானோ அதெல்லாம் வேண்டாம் என்றேன். முதல் காரணம் எனது உடல் பருமன்தான். இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் சொன்னேன். மேலும் நான் என் பிராமணாள் பாஷையை மாற்றி கொள்ள மாட்டேன் என்றேன்.
அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி, அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் வாருங்கள் என்றனர். இதையடுத்து நானும் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஒரு 5 எபிசோடுகள் போனதும் என்னுடைய வீடியோக்கள் பிக்காக தொடங்கியது. நிறைய வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து எனது மகன், டிவி நிகழ்ச்சியெல்லாம் எத்தனை நாளைக்கு! ஒரு யூடியூப் சேனல் தொடங்குங்கள் என்றார். அதற்கு நான் எல்லாரும் யூடியூப் சேனல் தொடங்கி ஜாம்பவான்களாக உள்ளனர். நாம் வெறுமனே சமையல் மட்டும் தொடங்காமல் அதனுடன் ஒரு பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற கதை சொல்வதுடன் தொடங்கலாம் என்றேன்.
மகனும் நல்ல ஐடியா என சொன்னதும் 2017 ஆம் ஆண்டு யூடியூப் சேனலை தொடங்கினேன். ஆரம்பத்தில் பலூன் மாதிரி இருக்கீங்க, குண்டூசி குத்தினா அவ்வளவுதான் என்றெல்லாம் எனது உடல் பருமனை கிண்டல் செய்தனர். நாளடைவில் என்னை அம்மா அம்மா என நிறைய பேர் அழைக்க தொடங்கினர். சிலர் மாமி இந்த உணவு செய்யுங்கள், அந்த டிஷ் செய்யுங்கள் என கேட்க தொடங்கினர்.
எனது வாழ்வில் பெரும் சோகம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. எனது கணவர் சுந்தரும் நானும் அமெரிக்காவுக்கு செல்லவிருந்தோம். ஆனால் திடீரென அவர் தனது டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு என்னை மட்டும் அனுப்பிவிட்டு அவர் மாத இறுதியில் வருவதாக தெரிவித்தார். நானும் மார்ச் 23 ஆம் தேதி அமெரிக்கா சென்றேன். 25 ஆம் தேதி போய் சேர்ந்தேன். 26 ஆம் தேதியெல்லாம் சுந்தர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.
அது என் வாழ்க்கையை புரட்டி போட்டது. இருந்தாலும் நான் அதிலிருந்து மீண்டு வந்தேன். நான் இன்று சமைக்கும் உணவுகள் பெரும்பாலுமே சுந்தர் சாப்பிட்டு ரசித்த உணவுகள்தான். அவர் என்னுள் இருந்து இயக்குகிறார். அவர் இறக்கவில்லை, என்னுடன் என்னுள் இருக்கிறார். இவ்வாறு யோகாம்பாள் சுந்தர் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications