கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய விஜய் டிவி.. பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததும் யுகேந்திரன் பதிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான யுகேந்திரன் வாசுதேவன் நேற்று எவிக்ஷனில் ஒரு போட்டியாளராக வெளியேறி இருந்தார்.
அதே நேரத்தில் விஜய் டிவி சமூக வலைத்தள பக்கத்தில் bye bye என்று குறிப்பிட்டு இருந்தனர். இது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் யுகேந்திரன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்
அந்த வகையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் நடைபெற்றது. இந்த சீசனில் போட்டியாளராக அறிமுகமான யுகேந்திரன் வாசுதேவன் பலருடைய பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இவருடைய நிதானமான விளையாட்டு மற்றும் நியாயமான பேச்சு பலரையும் கவர்ந்திருந்தது.
அதைத்தொடர்ந்து இவர் வீட்டின் தலைவராக மாறி இருந்த நிலையில் ஸ்மால் பாஸுக்கு ஆதரவாக இவர் ஆக்சிஜன் டாஸ்க்கில் விளையாடிய விதம் பல நெகட்டிவ் கருத்துக்களை பெற்றது. இவர் பிரபல பாடகர் வாசுதேவனின் மகன் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் தெரிந்திருந்தது.
அதோடு இவரை நடிகராகவே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இவர் எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார்கள் என்ற ரகசியமும் வெளியே தெரிய இவருக்குள் இப்படி எல்லாம் ஒரு திறமை இருக்கிறதா? என்று பலர் வியந்து வந்தனர். ஆரம்பத்திலிருந்து இவர் இரண்டு வாரங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்தாலே போதும் என்று இவருடைய மனைவியும் வெளியே பேட்டி கொடுத்து இருந்தார்.
அதுபோலவே தற்போது மூன்று வாரம் முடிவு அடைந்ததும் நான்காவது வாரத்தில் யுகேந்திரன் வெளியேறி இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனால் இது உண்மையான எவிக்ஷன் கிடையாது உள்ளே இவரை விட மோசமாக ஐசு, அக்ஷயா போன்றோர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் காதல் கண்டென்ட் கொடுத்து கொண்டிருப்பதால் அவர்களை விட்டு விட்டு இவரை தூக்கி விட்டார்கள் என்றெல்லாம் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ரசிகர்களை விடவும் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்த விஜய் டிவி கூட மிச்சர் புகைப்படத்தை வைத்து bye bye என்று பிக் பாஸை டேக் செய்து பதிவு ஒன்று போட்டு இருந்தது.
இது கிரியேட்டிவ் சைடுல இருந்து வெளியானதாக இருந்தாலும் இந்த மாதிரி போட்டியாளர்களை கூப்பிட்டு வைத்து கேவலப்படுத்தலாமா? என்று பலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் யுகேந்திரன் வெளியே வரும் போது அதை பெரிய அளவில் பிரச்சனை ஆக்கி நடிக்காமல் சக போட்டியாளர்களிடம் எப்போதும் தான் பழகுவது போன்றே பேசிக் கொண்டு வெளியே வந்திருந்தார்.
அதுபோல வெளியே வந்ததும் அவர் தன்னுடைய instagram பக்கத்தில் "முடிந்தவரை முயற்சி செய்வோம்.. முடிவுகளை ஏற்றுக்கொள்வோம்" என்று தன்னுடைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதோடு இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தனக்காக ரசிகர்கள் வைத்த ஸ்டோரிகளையும் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு வெளியே வந்ததும் தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படத்தை தன்னுடைய மனைவி அவருடைய instagram பக்கத்தில் பகிர அதையும் தன்னுடைய ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் யுகேந்திரன் வெளியே வந்திருந்தாலும் அவரைப் பற்றி ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் இனி அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications