Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் பெரிய சண்டை.. குடும்ப பிரச்சனைகளை வெளிப்படையாக பேசிய யுவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பப் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதாவது தன்னுடைய அப்பா இளையராஜாவிற்கும் சித்தப்பா கங்கை அமரனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றியும் அப்போது அண்ணன் தம்பிகளில் நிலைமை எப்படி இருந்தது என்பது பற்றி அந்த பேட்டியில் யுவன் சங்கர் ராஜா பேசி இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் பேட்டிகளில் தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு தனியார் youtube சேனல் ஒன்றில் பிரேம்ஜி குறித்தும் பேசி இருக்கிறார். ஒருமுறை எங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் சண்டை வந்தது. அந்த நேரத்தில் நான் பிரேம் கிட்ட என்ன செய்கிறா என்று கேட்டேன். அதற்கு அவன் வித்தியாகருக்காக வாசிக்கிறேன் அப்படின்னு சொன்னான்.

ilayaraja yuvan shankar raja

நான் உடனே நாளையில் இருந்து இங்கே வந்தடு என்று சொன்னேன். அந்த நேரத்தில் நான் யார் கிட்டவும் அவனிடம் பேசுவதற்கு அனுமதி கேட்கவில்லை. அம்மாவிடம் மட்டும் சாப்பிடும் போது சொன்னேன். அதற்கு அம்மா இதற்கு அப்பா ஒத்துக்க மாட்டாரு என்று சொன்னாங்க. நான் அம்மாகிட்ட நீங்க அப்பாவை ஹாண்டில் பண்ணிக்கோஙக என்று கூலாக சொல்லிவிட்டு போய் விட்டேன்.

அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் பெரிய சண்டையிலும் பிரேம் என் கூட தான் இருந்தான். வெங்கட் பிரபு அப்பப்ப வந்து பாடுவார். அப்படித்தான் சென்னை 600028 படம் டேக் ஆப் ஆச்சி. குடும்பத்தில் பெரியவங்க சண்டை போட்டாலும் நாங்கள் அதை கண்டுக்க மாட்டோம். நாங்க அண்ணன் தம்பிகள் எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என பேசிக் கொண்டிருந்த யுவன் சங்கர் ராஜா கார்த்திக் ராஜா பற்றியும் பேசி இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்- வைஷ்ணவியின் எளிமையான நிச்சயதார்த்தம்.. வாழ்த்திய பிரபலங்கள்
=

கார்த்திக் ராஜா இளையராஜாவிற்கு பல பாடல்களுக்கு உதவி செய்திருக்கிறார். ஆனாலும் அவருடைய புகழ் பெரிய அளவில் வெளியே தெரியவில்லையே என்ற கேள்விகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் தென்றல் வந்து என்னை தீண்டும்போது என்ன வண்ணமோ என்ற பாடலுக்கு முழுமையாக ப்ரோக்ராம் செய்தது கார்த்திக் ராஜா தான். அந்த பாடல் மட்டுமல்ல அதுபோல நிறைய பாடல்கள் இருக்கிறது.

கார்த்திக் ராஜா அண்ணா என்னை விட திறமைசாலி. அவருக்கு எல்லாமே தெரியும். அவருக்கு இசையுடைய நோட்ஸ் எழுதவும் தெரியும் படிக்கவும் தெரியும். அவருக்கு உண்டான பிரேக் இன்னும் வரல. அதை நினைச்சா தான் எனக்கு பீலிங்கா இருக்கிறது என்று வருத்தப்பட்ட யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் அவர் இசையமைக்கும் படங்களின் அளவு குறைந்து இருப்பது குறித்தும் பேசி இருந்தார். அதில் நான் வேண்டுமென்று திட்டமிட்டு படங்களை குறைக்கல.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இசையமைப்பாளர்கள் அதிகரிச்சிட்டாங்க .அப்போது இயல்பாகவே படங்களில் எண்ணிக்கை குறையும் தானே! அப்படித்தான் எனக்குமானது என்று சொன்ன யுவன் சங்கர் ராஜா தான் தன்னுடைய வாழ்க்கையில் மிஸ் பண்ணியது என்றால் சோசியல் மீடியா பிரபலத்தை தான். சோசியல் மீடியாவில் நான் ஆக்டிவாக இருந்திருக்கலாம். நான் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஏதும் ட்விட்டர் பக்கத்தை டி ஆக்டிவேட் செய்துவிட்டேன்.

அதை அப்படியே வைத்திருந்தால் ஓரளவு நன்றாக இருந்திருக்கும். சோசியல் மீடியாவில் என்ன நடக்கிறது என்று எனக்கும் அப்டேட் தெரிந்திருக்கும். சில பாடல்கள் சோசியல் மீடியாவில் ஹிட்டாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் ஆனால் என்னை பொறுத்தவரையில் ஏதாவது டீக்கடையிலோ அல்லது காரில் செல்லும்போது அந்த பாடல் ஒலித்தாலோ நம்ம போட்ட பாடல் ஹிட் ஆகிருக்கு என்று தெரிந்து கொள்வேன். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் சில நேரங்களில் நினைத்துக் கொள்வேன் என அந்த பேட்டியில் யுவன் சங்கர் ராஜா பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+