சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்- வைஷ்ணவியின் எளிமையான நிச்சயதார்த்தம்.. வாழ்த்திய பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வெற்றி வசந்த் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவிக்கு நேற்று சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் வெற்றி வசந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைஷ்ணவியோடு எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு தாங்கள் இரண்டு மாதங்களாக காதலித்து வருவதாகவும் தங்கள் உடைய எங்கேஜ்மென்ட் இந்த வாரத்தில் விரைவில் நடைபெற இருக்கிறது,. அதை தொடர்ந்து சில வாரங்களில் திருமணம் நடைபெற இருக்கிறது. எங்களுக்கு இதுவரைக்கும் வாழ்க்கையில் துணையாக இருக்கும் ரசிகர்கள் எங்களுடைய வாழ்க்கையில் வெற்றிக்கு வாழ்த்த வேண்டும் என்று பதிவு வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று வெற்றி வசந்த், வைஷ்ணவி திருமண நிச்சயதார்த்தம் இரண்டு வீட்டு பெற்றோர்கள், பெரியோர்கள், சின்னத்திரை நண்பர்கள் என்று பலர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. இவர்களுக்கு பல பிரபலங்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். வெற்றி வசந்த் ஆரம்பத்தில் ஒரு யூடியூபராக அறிமுகமாகி சில ஷார்ட்ஸ் ஃபிலிம்களில் நடித்திருந்தார். சின்னத்திரையில் முதல்முறையாக சிறகடிக்க ஆசை சீரியலில் தான் இவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கி இருந்தார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மூலமாக இவர் சின்னத்திரை விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகிறார்கள். முதல் சீரியலிலே இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்துதான் சில மாதங்களுக்கு முன்பு இவர் விரைவில் ரசிகர்களிடம் ஒரு மகிழ்ச்சி செய்தி சொல்லப்போகிறேன் என்று சொல்லி இருந்தார். அதை பார்த்ததும் ரசிகர்கள் இவர் திரைப்படத்தில் நடிக்க போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் தன்னுடைய காதல் ரகசியங்களை இவர் உடைத்திருக்கிறார்.
சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது கொள்வது புதிதல்ல. அதிலும் சமீபத்தில் சின்னத்திரையில் பல நடிகர் நடிகைகள் ஒன்றாக நடித்து அடுத்தடுத்து திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது சீரியலில் அண்ணன் தங்கையாக நடித்து நிஜத்தில் விரைவில் கணவன் மனைவியாக வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி மாற இருக்கிறார்கள்.
பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் வைஷ்ணவி ஏற்கனவே ராஜா ராணி சீரியலில் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். இந்த சீரியலில் இவருக்கு பிரபலம் கிடைத்ததை தொடர்ந்து கதாநாயகியாக மாறி இருந்தார். ஆரம்பத்தில் பொன்னி சீரியலில் இவருடைய கேரக்டர் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வந்தது. ஆனால் இப்போது அந்த சீரியல் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பொன்னி சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு வெற்றி வசந்த் பொன்னியின் அண்ணனாக அவருக்கு சீர் கொண்டு வரும் காட்சிகள் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அந்த சீரியலில் இவருடைய காட்சிகள் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இப்போது இவர்கள் காதலை அறிவித்ததை தொடர்ந்து இவர்கள் ஒன்றாக நடிக்கும் போது தான் காதல் ஏற்பட்டதா என்று கேள்விகள் குவிந்து வருகிறது.
நடிப்பு வேறு ரியல் வாழ்க்கை வேறு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ நம்முடைய சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications