பரணியை வீட்டை விட்டு துரத்தும் சண்முகம்.. மறுபக்கம் சீதாவை புரிந்து கொள்ளும் ராம்! ஜீ தமிழ் சீரியல் அப்டேட்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் மற்றும் சீதாராமன் சீரியல்களில் பிப்ரவரி 16ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். அதில் அண்ணா சீரியலில் பரணி சண்முகத்தை புரிந்து கொண்டு அவரோடு வாழ்க்கையை தொடங்கலாம் என்று இருக்கும் நிலையில் சண்முகம் பரணியை தப்பாக புரிந்து கொண்டு வீட்டை விட்டு துரத்துகிறார்.
மறுபக்கத்தில் சீதாராமன் சீரியலில் இத்தனை நாட்களாக சீதா தான் கொலைகாரி என்று நினைத்திருந்த ராம் சீதாவை புரிந்து கொள்கிறார். அதே நேரத்தில் பல மர்மமான முடிச்சுகளும் அவிழ்ந்து இருக்கிறது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி கண்ணீருடன் புலம்ப அதை சிவபாலன் கேட்டு பீல் செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஷண்முகம் வீட்டிற்கு வராமல் ஓரிடத்தில் புலம்பி கொண்டிருக்க வெட்டுக்கிளி அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைக்க ஷண்முகம் வீட்டிற்கு வந்தா இசக்கி ஞாபகமாவே இருக்கு நான் வரல என்று சொல்ல அப்பா ரொம்ப வருத்தப்படுறாரு வா அண்ணே என்று கூப்பிட்டும் ஷண்முகம் வர மறுக்கிறான்.
மறுபக்கம் பாக்கியத்துக்கு கை கால் வலியாக இருக்க வீட்டிற்கு உருவி விட வந்த பாட்டி கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு அடுத்து என்ன என்ற கேட்க பாக்கியம் என்ன செய்யறதுன்னு புரியாமல் இருப்பதாக சொல்கிறாள். பாட்டி நீ மட்டும் உன் புருஷனை விரும்பியா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த, ஆனால் அவன் கூட சேர்ந்து வாழலையா? அதே மாதிரி தான் சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணு, அவங்களும் நல்லபடியா சேர்ந்து வாழ்வாங்க என்று சொல்கிறாள்.
இதனை தொடர்ந்து பாக்கியம் ஜோசியரை சந்தித்து நாள் குறித்து கொடுக்க சொல்லி கேட்க இன்னைக்கே நாள் நல்லா தான் இருக்கு என்று சொல்கிறார். பையனுக்கு மட்டும் நாள் குறிக்க வந்திருக்கீங்க பொண்ணுக்கு வேற ஜோசியரை பார்த்து நாள் குறிச்சிடீங்களா என்று கேட்க பாக்கியம் அவங்களுக்கு பிடிக்காமல் கல்யாணம் நடந்ததால் இன்னும் எதுவும் நடக்கல என்று சொல்ல ஜோசியர் அவங்களுக்கும் நாள் குறித்து கொடுத்து அனுப்புகிறார்.
பாக்கியம் பரணியை வர வைத்து முத்துப்பாண்டி இசக்கி சாந்திமுகூர்த்தம் குறித்து சொல்ல பரணி பிடித்து திட்டி வீட்டிற்கு அழைத்து வருகிறாள். இங்க இசக்கி பரணியை பார்த்ததும் அண்ணன் எதாவது சொல்லுச்சா என்று விசாரிக்க பரணி எதுவும் சொல்லல என்று சொல்கிறாள். ஜோசியர் சண்முகத்தை பார்க்க பரணியும் பாக்கியமும் சாந்தி முகூர்த்தத்துக்கு நாள் குறிக்க வந்ததாக சொல்ல பரணியை தப்பாக புரிந்து கொண்டு கோபமடைகிறான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அதைத் தொடர்ந்து சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் நான்ஸி கல்பனாவை அர்ச்சனா கெட்டப்பில் வீட்டிற்கு அழைத்து வர மூன்று பெண்களும் கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சுபாஷ் அது கல்பனா என தெரியாமல் ஐ லவ் யூ சொல்லி கட்டிப்பிடிக்க போக கல்பனா கடுப்பாகிறாள். மூன்று பெண்களும் ஒன்றாக சேர்ந்து கேக் கட் பண்ண சொல்ல இருவரும் கேக்கை கட் செய்ய சுபாஷ் ஊட்டி விட்டு முகத்தில் கிரீம் தடவ சீதா இதை பார்த்து மகா செத்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படியா, இதெல்லாம் தேவையா என்று சத்தம் போட நான்சி மகா சாவுக்கு நீ தான் காரணம். உனக்கு தூக்கு தண்டனை வாங்கி தராமல் விட மாட்டேன் என்று எச்சரிக்கிறாள்.
பிறகு ரூமுக்குள் செல்லும் கல்பனா கதவை லாக் செய்து ஸ்மோக் செய்ய சேது அர்ச்சனாவை கூல் செய்ய மேல வந்து கதவை தட்ட சிகரெட்டை தூக்கி போட்டு கதவை திறக்க சுபாஷ் ரொமான்டிக்காக நெருங்கி வர கல்பனா ஒரு அறை விட்டு வெளியே துரத்துகிறாள். உடனே நான்ஸி கல்பனாவை தனது ரூமுக்கு கூப்பிட்டு சுபாஷை அடித்ததற்காகவும் ஸ்மோக் செய்தததற்காகவும் பளாரென அறைகிறாள். இன்னொரு முறை இப்படி நடந்துக்கிட்டா ஜெயிலுக்குள்ள தான் இருக்கனும் என வார்னிங் கொடுக்க இவர்கள் பேசுவதை சீதா பார்த்து விடுகிறாள்.
ஆனால் என்ன பேசிக்கிறாங்க என்று தெரியாமல் கன்ப்யூஸ் ஆகிறாள். அதனை தொடர்ந்து ராஜசேகர் ராமை கூட்டி கொண்டு அனுபவம் வாய்ந்த தடயவியல் நிபுணர் ஒருவரை சந்தித்து துப்பாக்கியை கொடுத்து கை ரேகை குறித்து ஆராய்ந்து சொல்ல சொல்கின்றனர். அதை ஆய்வு செய்த அவர் சீதா இந்த துப்பாக்கியை ஒரே முறை தான் எடுத்து சுட்டு இருக்கா, திரும்பவும் அவ இந்த துப்பாக்கியையே தொடல என்று சொல்ல ராம் அதிர்ச்சி அடைகிறான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications