அண்ணா சீரியலில் அதிரடி என்ட்ரி கொடுக்கும் பிரபலங்கள்.. சண்டே ஸ்பெஷலில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அண்ணா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது . மிர்ச்சி செந்தில், நித்யா ராம், பூவிலங்கு மோகன், ரோசரி, சத்யா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அண்ணன் தங்கைகளின் பாசக் கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

சௌந்தரபாண்டியின் உண்மை முகத்தை கிழித்து அம்மா சூடாமணி உத்தமி என்பதை ஷண்முகம் நிரூபித்து காட்டியதை தொடர்ந்து சீரியல் கதை ரத்னா கல்யாணத்தை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் வரும் ஞாயிறு ( ஆகஸ்ட் 25 ) மதியம் 1:30 மணிக்கு அண்ணா சீரியலின் இரண்டரை மணி நேர ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த ஸ்பெஷல் எபிசோடில் பலர் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க உள்ளனர். முதலாவதாக ஷண்முகமாக நடித்து வரும் செந்தில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்க உள்ளார். அதாவது டபுள் ஆக்ஷனில் அசத்த உள்ளார் செந்தில்.

இதனை தொடர்ந்து அயலி வெப் சீரிஸ் மூலமாக பிரபலமாகி சின்னத்திரையை கலக்க தொடங்கிய காயத்ரி அப்பத்தாவாக அசத்த வருகிறார். மேலும் சரவணனாக நடிக்க உள்ள செந்திலுக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் புகழ் பார்வதி நடிக்க உள்ளார்.
இதுமட்டுமின்று இன்னும் பலர் சிறப்பு வேடத்தில் நடித்து ரசிகர்கள் எதிர்பாராத ட்ரீட் கொடுக்க உள்ளனர். இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. எனவே அண்ணா சண்டே ஸ்பெஷல் எபிசோடை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications