கெட்டிமேளம்: புலம்பி சிக்கிக் கொண்ட அஞ்சலி.. வெற்றியிடம் உதவி கேட்கும் துளசி - இன்றைய அப்டேட்
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் மற்றும் அஞ்சலி என இருவருக்கும் நிச்சயம் நடந்து முடிந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது நிச்சயம் நடந்து முடிந்ததும் லட்சுமி சோகமாக இருக்க சிவராமன் என்னாச்சு என கேட்கிறார். அஞ்சலி கல்யாணம் ஆகி போயிட்டதும் அவ வீட்ல தனியா தான் இருப்பா மாப்பிள்ளைக்கு வேற சொந்தம் யாரும் இல்ல அவர் வேற பெரிய பிசினஸ்மேன் என்று கவலைப்பட துளசி அதுக்கு என்னம்மா தினமும் வீடியோ கால்ல பேசிக்கலாம் என ஆறுதல் சொல்கிறாள்.

இதைத் தொடர்ந்து ரகுராம் மற்றும் கேசவன் என இருவரும் மாப்பிள்ளை பெரிய இடமாக இருக்காரு அவர வச்சு செட்டில் ஆகிவிட வேண்டும் என திட்டம் போடுகின்றனர். ரகுராம் முதலில் அவரது சொத்துக்கள் பாதியை அஞ்சலி பெயரில் எழுத வைத்து அதில் பங்கு கேட்க வேண்டும் என திட்டம் போடுகிறான்.
மறுபக்கம் எம்எல்ஏ வீட்டில் வெற்றியின் அம்மா வெற்றிக்கு கல்யாணம் செய்யலாம் என பேச்சு எடுக்க கல்யாணத்தை பெரிய அளவில் செய்து விளம்பரம் தேடலாம் என திட்டம் போடுகிறார் எம்எல்ஏ. வெற்றி வந்ததும் அவனது நண்பர்கள் இந்த விஷயத்தை சொல்ல வெற்றி ஷாக் ஆகுகிறான்.

அடுத்த நாள் தனக்கு பிறந்தநாள் என்பதால் அஞ்சலி மகேஷ் தனக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லல என புலம்பியபடி இருக்கிறாள். இந்த சமயத்தில் மகேஷ் வீட்டுக்கு வர இது தெரியாமல் அஞ்சலி மகேஷ் என்ன பிரைவேட் ஜெட்ல கூட்டிட்டு போய் கடலுக்கு நடுவே கட் பண்ணி சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா ஒரு வாழ்த்து கூட சொல்லல என பேசியபடி வெளியே வந்து மகேஷை பார்த்து ரூமுக்குள் ஓடி விடுகிறாள்.
இதையடுத்து மகேஷ் லட்சுமியிடம் அஞ்சலியை வெளியே அழைத்துச் செல்ல அனுமதி கேட்க லட்சுமி எல்லோரிடமும் பேசிவிட்டு அனுமதி கொடுக்கிறாள்.

கவினின் அப்பா வரதராஜன் தன்னுடைய வீட்டில் வேலை செய்பவனை துப்பாக்கியால் சுடப் போக கவின் என்னாச்சு என தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கிறான். என்னோட பையன் யாரையோ காதலிச்சு இழுத்துட்டு போயிட்டான் என்று சொல்லி கோபப்படுகிறார். காதலால இந்த குடும்பம் பிரிஞ்சது உனக்கு தெரியும் தானே என்று ஆவேசப்பட கவின் அப்பா காதலை எவ்வளவு வெறுக்கிறார் என்பதை தெரிந்து கொள்கிறான்.
அடுத்து துளசி தியாவை பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த் வீட்டிற்கு வருகிறாள். செக்யூரிட்டி துளசியை உள்ளே விட மறுக்கிறார். இதனால் துளசி எப்படி வீட்டுக்குள் செல்வது என தெரியாமல் தவிக்க அந்த வழியாக வரும் வெற்றி துளசியை பார்த்து என்ன மேடம் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்கிறான்.

முதலில் முகம் கொடுத்து பேசாத துளசி பிறகு எனக்கு இந்த வீட்டுக்குள்ள போகணும் உன்னால முடியுமா என்று கேட்க வெற்றி பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஈபி ஆட்களிடம் ஏணியை வாங்கி அதன் மூலமாக துளசியை உள்ளே அனுப்பி வைக்கிறான்.
தியா நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வெயிட்டான பொருட்களை தூக்கி கொண்டு செல்வதை பார்த்து கண் கலங்குகிறாள். துளசியை பார்த்த தியா சாப்பாடு கூட கொடுக்காமல் அடித்து துன்புறுத்துவதாக சொல்கிறாள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications