கெட்டிமேளம்: ஏழைன்னு அவமானப்படுத்துனா இதுதான் பதிலடி.. திடீர் திருப்பம்.. மாஸ் காட்டிய எபிசோடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணிநேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்ரீகாந்த் சொத்துக்களை துளசி பெயரில் எழுதி வைத்திருக்க ரகுராம் சொத்தை விட்டுடாதே என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வீட்டிற்கு வந்த ரகுராம் இனிமே நமக்கு பணத்துக்கு கவலையே இல்ல.. ஸ்ரீகாந்த் சொத்து மொத்தத்தையும் நம்ம துளசி பெயரில் எழுதி வைத்திருக்கார் என்று பணத்தை பற்றியே பேச பாலமுருகன் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க ரகுராம் அநாதை பயலே என்று திட்டி காயப்படுத்துகிறான்.

zee Tamil Chayasingh Gettimelam serial

பிறகு துளசி மற்றும் லட்சுமி என இருவரும் பாலமுருகனை சமாதானம் செய்கின்றனர். அடுத்ததாக துளசி மற்றும் லட்சுமி என இருவரும் மோனிகா மற்றும் ஜெகனை ஒரு பொது இடத்தில் வைத்து சந்திக்கின்றனர். அப்போது உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக்கிட்டு சொத்துக்களை மாற்றி எழுதி கொடுங்க என அவமானப்படுத்தி பேசுகின்றனர். மேலும் இங்கிலீஷில் பேசி அவமானப்படுத்த முயற்சிக்கின்றனர்.

zee Tamil Chayasingh Gettimelam serial

இதனால் ஆவேசம் அடையும் லட்சுமி முதல் முறையாக ஆங்கிலத்தில் பேச அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மோனிகா பேச முடியாமல் நிற்கிறாள். ரகுராம் அம்மாவா இப்படி இங்கிலிஷ் பேசுறாங்க என ஆச்சரியப்படுகிறான். மேலும் லட்சுமி பணம் இல்லாமல் உங்களால் தான் இருக்க முடியாது. எங்களால் இருக்க முடியும் என்று சொல்கிறாள்.

zee Tamil Chayasingh Gettimelam serial

அதுமட்டுமின்றி எங்களுக்கு பணம் எல்லாம் தேவை இல்ல.. தியா மட்டும் போதும் என சொல்கிறாள். அடுத்து லாயர் என்ன முடிவு எடுத்து இருக்கீங்க என்று கேட்க குழந்தையை நாங்க கூட்டிட்டு போறோம். சொத்துக்கள் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்கிறாள். அடுத்து தியாவுடன் இவர்கள் வீட்டிற்கு வர துளசி சந்தோசத்தை பார்த்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர்.

zee Tamil Chayasingh Gettimelam serial

அதன் பிறகு துளசி தவறுதலாக வெற்றிக்கு போன் செய்ய அவன் வீட்டில் பெண் பார்க்கும் விஷயத்தையும் ஒரு பெண்ணை காதலிக்கும் விஷயத்தையும் சொல்கிறான். துளசி உங்க நல்ல மனசுக்கு நீ லவ் பண்ற பொண்ணே கிடைப்பாங்க என்று வாழ்த்துகிறாள்.

zee Tamil Chayasingh Gettimelam serial

அடுத்ததாக அஞ்சலியின் பத்திரிகையை வைத்து பூஜை செய்கின்றனர். அஞ்சலி எல்லாரது காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். பிறகு மகேஷ் கல்யாண பத்திரிக்கையுடன் வீட்டிற்கு வந்து எனக்கும் உங்களை விட்டா வேற குடும்பம் கிடையாது. முதல் பத்திரிக்கை உங்களுக்கு தான் என்று பாட்டியிடம் கொடுத்து பிறகு எல்லாரது காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+