அம்மா முன்னாடியே அட்ஜஸ்மெண்ட் கேட்ட "அந்த” நபர்.. திடீர் பரபரப்பு ஏற்படுத்திய ஜீ தமிழ் சீரியல் நடிகை
சென்னை: சமீபகாலமாகவே சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகைகள் பலர் தாங்கள் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
காரணம் தாங்கள் தயங்கி தயங்கி இருந்ததனால் தான் பலர் இதையே ஒரு சாக்காக வைத்து பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார்கள் என்று பலர் இப்போது புரிந்து கொண்டார்கள்.
அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் நடிகை சுவாதி சர்மா தான் சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பலர் அதை வெளியே சொல்வதற்கு தயங்கி மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் தைரியமாக அதை வெளியில் சொல்லி தங்களிடம் தவறாக நடந்து கொண்டவர்களுக்கு பாடம் புகட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை வரலட்சுமி தன்னிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நபர் பற்றி கூறியிருந்தார். அதுபோல சின்ன திறையிலும் பல நடிகைகள் தொடர்ந்து தாங்கள் அனுபவித்த பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துவரும் லாவண்யா தன்னிடம் வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சொன்னதை குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.
அந்த வரிசையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கதாநாயகி ஆக நடித்துவரும் சுவாதி சர்மா தான் தான் ஆரம்பகாலகட்டத்தில் சந்தித்த பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். இவர் காலேஜ் படித்து முடித்ததும் மாடலிங் மூலமாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தாராம். அப்போது இவருடைய அம்மாவோடு தான் வாய்ப்பு தேடி போயிருக்கிறார்.
அந்த நேரத்தில் ஒரு நபர் இவரிடம் இவருடைய அம்மா முன்பு வைத்து அட்வெஸ்மென்ட் பற்றி வெளிப்படையாக கேட்டிருக்கிறார். அதற்கு அவருடைய அம்மா அதிர்ச்சியாகி கோபமடைந்து இருக்கிறார். அப்போது சுவாதி வேகமாக கத்தி அந்த நபரை திட்டிவிட்டாராம். பிறகு வெளியே வந்த சுவாதியிடம் அவருடைய அம்மா ரொம்பவே கோபப்பட்டு இருக்கிறார்.
இதற்கு தான் இந்த நடிப்பு வேண்டாம் என்று சொல்றது, நான் கூட இருக்கும்போதே உன்னிடம் இப்படி இந்த ஆட்கள் நடந்து கொள்கிறார்கள் என்றால் நீ வெளியே தனியா நடிக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்று பயந்து இருக்கிறார். பிறகு அம்மாவை ரொம்பவே கஷ்டப்பட்டு தான் சமாதானப்படுத்தினேன் என்று சுவாதி கூறி இருக்கும் நிலையில் இந்த ஒரு நிகழ்வை நினைத்து," நினைத்தாலே இனிக்கும்" சீரியலில் சூட்டிங்காக சென்னைக்கு வருவதற்கு ரொம்பவே பயந்தேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகை சுவாதி சர்மா கன்னட நடிகையாக தான் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தை தொடங்கி இருக்கிறார். அவருடைய முதல் சீரியல் வாய்ப்பு கன்னடாவில் தான் கிடைத்திருக்கிறது. அங்கு கண்டேயா கதே, துரோணா மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து தான் இவருக்கு தமிழில் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த சீரியலில் பொம்மி கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது பொம்மி இறந்து போய் இருப்பது போன்று கதை போய்க்கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து அதே வீட்டிற்குள் ராணியாக மீண்டும் இவரே வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
-
Vadivelu: இதனால் தான் விவேக் இறப்புக்கு கூட போகல.. கண்கலங்க பேசிய நடிகர் வடிவேலு -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications