மாமியார் Vs மருமகள்கள்.. தொகுப்பாளர் முன்பே இப்படியா நடக்கணும்? - தமிழா தமிழாவில் நடந்த சம்பவம்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான விவாத நிகழ்ச்சி தமிழா தமிழா. தற்போது இந்த நிகழ்ச்சியை சாமானிய மக்களில் ஒருவரான ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான தலைப்பை கையில் எடுத்து தமிழா தமிழா குழுவினர் விவாத மேடையை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையில் கொண்டு செல்கின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் மாமியார்களும் மருமகள்களும் பங்கேற்கும் விவாத மேடையாக இந்த தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதுவும் ஓய்வெடுக்க சொல்லும் மருமகள் Vs ஓயாமல் வேலை பார்க்கும் மாமியார் என்ற தலைப்பில் இந்த விவாதம் நடைபெற உள்ளது.
பொதுவாகவே மாமியார் மருமகள் என்றாலே சண்டை சச்சரவு தான் என்பதை மீறி அவர்களுக்குள் அழகான பந்தமும், நல்ல புரிதலும் உள்ளது என்பதை பேசும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ மூலமாக தெரிய வருகிறது.

அதுபோல தற்போது வெளியே ப்ரோமோ ஒன்றில் இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சிக்கு என்ன தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஆவுடையப்பன் கேட்டு இருக்கிறார். அதற்கு அங்கிருந்த மருமகள்களில் சிலர் "கடுகடுப்பான மாமியார் கலகலப்பான மருமகள்", "மருமகளுக்கு பயப்படும் மாமியார்", "மாமியார்களுக்கு எல்லாம் மாமியாராக இருக்கும் மருமகள்", "சுறுசுறுப்பான மாமியார் மற்றும் சோம்பேறியாக இருக்கும் மருமகள்" என்று பல தலைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு மருமகள் அங்கிருக்கும் ஒரு பெயர் மாமியாரை குறிப்பிட்டு இதுபோல ஒரு கலகலப்பான மாமியார் தான் எனக்கு வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு கிடைத்தது ரொம்பவும் ஸ்ட்ரீட்டான மாமியார். இது போன்ற கலகலப்பான மாமியார் எப்போதுமே தங்கம். எங்க வீட்டில் மாமியார் எப்போதுமே சிங்கம் என்று ரைமிங்காக பேசி இருக்கிறார். இந்த ஜாலியான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுபோல கடந்த வாரத்தில் நாட்டுக்காக போர் செய்து எல்லையில் கஷ்டப்பட்ட ராணுவ வீரர்களும் அவர்களை பிரிந்து காதலோடு காத்திருந்த மனைவிமார்களும் கலந்து கொண்டனர். அப்போது பல ராணுவ வீரர்கள் தங்களுடைய உணர்வு பூர்வமான காதலை அழகாக சொல்லி இருந்தனர். அதுபோல மனைவிமார்களும் தங்களுடைய கணவனுக்காக காத்திருந்த தருணங்கள் மற்றும் காதல், வேதனை என பல விஷயங்களையும் பகிர்ந்து இருந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications