சினேகாவா? நானா? ஜீ தமிழ் நிகழ்ச்சியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாடகி ஸ்வேதா மேனன், வெளியான வீடியோ
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சா நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் பாடகி ஸ்வேதா மேனன் போட்டியாளர் ஒருவரிடம் உனக்கு நான் முக்கியமா? சினேகா முக்கியமா? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
ஜீ தமிழில் சரிகமபா நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கு நடைபெற்று வருகிறது. அதில் தற்போது சரிகமப ஜூனியர் லிட்டில் சேம்ப்ஸ் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி சில மாதங்களை கடந்து இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமடைய தொடங்கி விட்டார்கள்.

மனம் கவர்ந்த போட்டியாளர்கள்
அதிலும் திவினேஷ், யோகஸ்ரீ போன்றோருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோல 7 வயது சிறுவனான புவனேஷுக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் கொஞ்சி கொஞ்சி பேசும் தன்னுடைய மழலை மொழியால் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து இருக்கிறார். ரசிகர்களை போல தான் நடுவர்களின் மனதையும் கவர்ந்திருக்கிறார்.
நடுவரின் செல்லப்பிள்ளை
புவனேசுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாடகி ஸ்வேதா மேனன் ஒரு ரசிகையாக இருக்கிறார். புவனேஷும் ஆரம்பத்திலிருந்து ஸ்வேதா மேனனை கவர்வது போன்று பாடல்கள் பாடிக்கொண்டும் அவருடன் செல்ல சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார். சில நேரங்களில் ஸ்வேதா மேனன் உடன் புவனேஷ் டான்ஸ் ஆடி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஜீ தமிழில் சரிகமப மற்றும் ஜோடி டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியின் மகா சங்கமும் நடைபெற்றது.
அப்போது புவனேஷ் நடிகை சினேகாவுக்கு சாக்லேட் ஊட்டி விட்டிருந்தார். இது குறித்து இந்த வார நிகழ்ச்சியில் ஸ்வேதா மேனன் புவனேஷ் உடன் கோபப்பட்டு இருந்தார். நீ என்னுடைய மனதை சுக்கு நூறா உடைத்துவிட்டாய். என் கண் முன்னாடியே ஸ்வேதா மேமுக்கு சாக்லேட் ஊட்டி விடுற என்று சொல்ல, அதற்கு புவனேஷ் ஸ்வேதா மேம் நீங்க மேடைக்கு வாங்க என்று கூப்பிடுகிறார்.

வாக்குவாதம்
அதற்கு ஸ்வேதா நான் வரமாட்டேன் உனக்கு நான் முக்கியமா? சினேகா முக்கியமா? என்று கேட்க, அதற்கு புவனேஷ் நீங்கதான் எனக்கு முக்கியம் என்று சொல்லி இருக்கிறார். பிறகு ஒரு பெரிய சாக்லேட் ஒன்றை ஸ்வேதாவிற்கு கொடுப்பதற்காக மேடைக்கு அழைக்கிறார். அப்போது அந்த சாக்லேட்டில் எஸ் என்ற எழுத்து இருப்பதால் இது ஸ்வேதாவிற்கு என்று புவனேஷ் சொல்ல எஸ் என்றால் ஸ்ரீநிவாஷ் சாரா? என்று அர்ச்சனா கேட்கிறார்.
ஸ்வேதா மேனன் சண்டை
அதுபோல எஸ் என்றால் சைந்தவியின் பெயரும் வருகிறது, எஸ். என்றால் சரண் பெயரும் வருகிறது என்று நடுவர்களின் அனைவருடைய பெயரும் எஸ். என்ற எழுத்தில் ஆரம்பிப்பதால் அர்ச்சனா புவனேஷை கிண்டல் பண்ணி கொண்டிருக்கிறார். பிறகு ஒரு வழியாக ஸ்வேதா மேனன் மேடைக்கு வர அவர் தன்னுடைய கன்னத்தில் புவனேஷ் முத்தம் கொடுக்க வேண்டும் என்பது போன்று கன்னத்தை திருப்பி வைத்திருக்கிறார்.
அறிவுரைகள்
பிறகு புவனேஷ் அவருடைய கன்னத்தில் முத்தம் கொடுத்து அவரை சமாதானம் செய்து சாக்லேட்டை ஊட்டி விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பலர் பாராட்டுகிறார்கள் சிலர் இதை பார்த்து திட்டி தீர்த்து வருகிறார்கள். ஒரு சின்ன குட்டி பையன் மனசில் தவறான எண்ணங்களை விதைப்பது போன்று பேசுவது மற்றும் நடந்து கொள்வது தவறு என்று பலர் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
ரசிகர்களின் கண்டனம்
இதுபோன்ற வயதிலேயே குழந்தைகளிடம் அனாவசியமான பேச்சுக்களை வைக்கும் போது அந்த குழந்தை ஸ்கூலில் போய் அடுத்த குழந்தைகளிடம் இதுபோல தானே தவறாக பேசும் அல்லது தவறாக நடந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது, இது தவறு என்று அந்த குழந்தைக்கு தெரியாது ஸ்வேதா மேனனை பார்த்து அந்த குழந்தை கண் அடிக்கிறது பறக்கும் முத்தங்கள் கொடுக்கிறது இதுவெல்லாம் தவறான முன் உதாரணம் என்று பலர் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். 7 வயது சிறுவனிடம் நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக இதுபோன்று மேடையில் நடந்து கொள்வது சரி என்று நினைக்கிறீர்களா? அல்லது இது அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறீங்களா பாஸ்?
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications