மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் பிரபலமாக ஆசையா? ஜீ தமிழில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் கொண்டு வரும் நிலையில் அடுத்து குழந்தைகளுக்கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது, அதுமட்டுமின்றி மகாநடிகை என்ற புதிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.
நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் பெண்களின் கனவை நனவாக்கும் மேடையாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது. இதற்கான ஆடிஷன் திருவண்ணாமலையில் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மகாநடிகை ஆடிஷன்ஸ் சேலத்திலும் சரிகம லிட்டில் சேம்ஸ் சீசன் 4 ஆடிஷன்ஸ் சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் நடை பெரும் நாள் மற்றும் இடம் குறித்த விபரங்கள் பின்வருமாறு,
மகாநடிகை ஆடிசன்ஸ் : இடம்: சேலம், நாள்: 22.08.2024 வியாழன் கிழமை, நடைபெறும் இடம்: ஆராதனா இசைப்பள்ளி, 10/315, காளியாபிள்ளை தோப்பு, இரண்டாவது குறுக்குத் தெரு, எஸ். கே. எஸ், ஆஸ்பிடல் ரோடு, பேர்லண்ட்ஸ், சேலம்.
சரிகமப மேடையில் அப்பா காலில் விழுந்துட்டாரு.. சொந்தக்காரங்க கேட்ட கேள்வி இருக்கே! மனம் திறந்த ஸ்வேதா
இந்த ஆடிஷனில் 18 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். தேர்வாகும் போட்டியாளர்களுக்கு நடிப்பு திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான பல ரவுண்டிகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரிகமபா லிட்டில் சேம்ஸ் சீசன் 4 ஆடிசன்ஸ் கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது இதை கொஞ்சம் நோட் பண்ணிக்கோங்க.

கிருஷ்ணகிரி: நாள்: 20.08.2024, செவ்வாய் கிழமை, நடைபெறும் இடம்: தேன் தமிழ் நாட்டியாலயா,No. 1/149, முதல் தளம், ஹைடெர் Complex , ராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி.
தருமபுரி: நாள்: 21.08.2024 புதன் கிழமை ,நடைபெறும் இடம்: ஸ்ரீ லட்சுமி சிவசக்தி டான்ஸ் அகாடமி சேலம் நெடுஞ்சாலை, நேதாஜி பைபாஸ் சாலை, அரசு மருத்துவமனை அருகில், இரயில் நிலையம் சாலை, அலெக்ஸ் ஆர்தோ கேர் 2வது மாடி, தருமபுரி,
சேலம்: நாள்: 22.08.2024 வியாழன் கிழமை, நடைபெறும் இடம்: ஆராதனா இசைப்பள்ளி, 10/315, காளியாபிள்ளை தோப்பு, இரண்டாவது குறுக்குத் தெரு, எஸ். கே. எஸ், ஆஸ்பிடல் ரோடு, பேர்லண்ட்ஸ், சேலம். இந்த சீசனுக்கான ஆடிஷனில் 6 முதல் பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம் என ஜீ தமிழ் தொலைக்காட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாமானியனையும் சாதனையாளராக மாற்றும் இந்த பொன்னான வாய்ப்பை ஆர்வமும்,திறமையும் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் நோக்கில் ஜீ தமிழ் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications