ஜீ தமிழ் சீரியல் அப்டேட்: 'கெட்டி மேளம்' வீட்டில் பிரிவு, 'அண்ணா'வில் வீரா கொடுத்த அடி! கார்த்திகை தீபத்தில் ரொமான்ஸ்
சென்னை, ஆகஸ்ட் 6, 2025: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களான 'கெட்டி மேளம்', 'சின்னஞ்சிறு கிளியே', 'கார்த்திகை தீபம்', 'அண்ணா' ஆகியவற்றின் இன்றைய எபிசோடுகள், விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை ஈர்த்துள்ளன.

கெட்டி மேளம்: இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு
நகை திருட்டு குறித்த சந்தேகத்தால், சிவராமன் வீட்டில் பெரும் குழப்பம் வெடித்தது. நகைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய துளசி, கேசவனிடம் தொடர்ந்து கேள்வி கேட்கிறார். கேசவன், அந்த நகைகள் போலியானவை என்று கூற, ரகுவரனுக்குத் தனது 6 லட்சம் ரூபாய் காணாமல் போனதில் கேசவனுக்கும் பங்கு இருக்கும் என்று சந்தேகம் வருகிறது. இதனால் கேசவனுக்கும், ரகுவரனுக்கும் சண்டை ஏற்பட்டு, கைகலப்பு வரை செல்கிறது. ஒரு கட்டத்தில் ரகுவரன் வீட்டுக்கு நடுவே கோடு போட்டு, வீட்டை இரண்டாகப் பிரிக்கிறார். இந்தச் சண்டைகளை எல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்த அஞ்சலி, மகேஷ் குறித்த உண்மையை இப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கிறாள்.
சின்னஞ்சிறு கிளியே: இந்துவுக்கு உதவிய அப்பா
இந்துவுக்கு பைக் டாக்ஸி பிசினஸ் செய்ய வேண்டும் என்ற யோசனை தோன்ற, அவள் அதைத் தொடங்குகிறாள். இரவு லேட்டாக வீட்டுக்கு வந்தபோது, அப்பா பாலு இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிய வருகிறது. மறுநாள் காலை வரை அவர் வராததால் பதறிப்போய் அவரைத் தேடி அலைகிறாள். ஒரு பெயிண்டர் ஏணியில் இருந்து கீழே விழுந்ததாகச் சொன்னதும், இந்து இன்னும் பதறுகிறாள். ஆனால் அது பாலு இல்லை என்று தெரிந்ததும் நிம்மதி அடைகிறாள். பின்னர் வீட்டுக்கு வந்த பாலு, ஒரு வேலைக்குச் சென்று பணத்துடன் வருவதால், இந்து மகிழ்ச்சி அடைகிறாள்.
மறுபுறம், கர்ணா, இந்து திரும்பி வரமாட்டா என்று வண்டியை எடைக்குப் போடச் சொல்கிறான். ஆனால், புல்லட் பாண்டி 'அவள் வருவாள்' என்று சொல்ல, இந்து ஆட்டோவில் வந்து இறங்குகிறாள்.
'கார்த்திகை தீபம்': காளியம்மாவின் திட்டம் தோல்வி
தேர்தலை நிறுத்த, காளியம்மாள், சிவனாண்டிக்கு ரகசியமாக ஒரு திட்டத்தைச் சொல்கிறாள். காளியம்மாவால் ஏற்பாடு செய்யப்பட்ட அடியார்கள், ஓட்டுப் பெட்டியைத் தூக்க பள்ளிக்குள் நுழைய, அறிவாளுடன் அங்கு காவலுக்கு இருந்த கார்த்திக் அனைவரையும் அடித்து விரட்டி விடுகிறான். இதனால் காளியம்மாவின் திட்டம் தோல்வியடைகிறது.
ரேவதி, ஆடி மாதம் பௌர்ணமியன்று கணவன் மனைவி கடற்கரையில் சமைத்த உணவைச் சாப்பிட்டால், மனக்கசப்புகள் நீங்கும் என்று சொல்லி, கார்த்தியைச் சமாதானம் செய்ய ஒரு புதிய திட்டத்தை வகுக்கிறாள்.
அண்ணா': சிவபாலனுக்கு தர்ம அடி கொடுத்த வீரா
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டுக்கு வந்து வீராவிடம் தாலியை கேட்க வீரா சிவபாலனை வர சொல்லுங்க என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சண்முகம் வீட்டுக்கு வரும் சிவபாலன் வீராவிடம் வா சேர்ந்து வாழலாம் என்று சொல்லி கூப்பிட வீரா அவனை செருப்பால் அடிக்கிறாள். இருந்தாலும் சிவபாலன் சண்முகம் வரும் வரை காத்திருக்க சண்முகமும் சிவபாலனை போட்டு அடிக்கிறான்.
இதனைத் தொடர்ந்து பாரதி மகாதேவன் சண்முகம் வீட்டுக்கு வந்து சூடாமணி உங்களை பற்றி நிறைய சொல்லி இருக்காங்க.. உங்க தங்கச்சிங்கள நல்லா வழிக்கு கொண்டு வர வேண்டியது உங்களோட பொறுப்பு என்று சொல்கிறார். இந்த சமயத்தில் கனியின் உடம்பு சூடாமணியின் ஆத்மா இறங்கி சூடாமணிக்கு தெரியாத ரகசியம் ஒண்ணு இவர்களுக்கு தெரியும் என்று சொல்கிறாள். இதனால், அடுத்த எபிசோடுகள் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications