தமிழா தமிழாவில் மானமே போச்சு.. "மாமியார் தண்ணி அடிக்கிறாங்க சார்.. புருஷன் குளிக்கவே மாட்டேன்றான்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் சேனலில், ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சியாக தமிழா தமிழா விவாத நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளுடன், விவாதித்து வருவது பார்வையாளர்களை கவர்ந்தும் வரும்நிலையில், இந்த வாரமும் விவாத நிகழ்ச்சி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் நிகழ்ச்சியில், புத்தாண்டையொட்டி, அதேபோல, 2025 Resolutions லிஸ்ட் போடும் மனைவிகள் மற்றும் கணவன் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதாவது, தன்னுடைய பார்ட்னர் எந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும், 2025-ல் செய்ய விரும்பும் செயல்கள் என்னென்ன என்ற கேள்விகளுடன் விவாதம் துவங்கியது. ஏராளமான தம்பதியினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

zee tamil thamizha thamizha

விவாதம்: அந்தவகையில் ஒரு இளம்பெண், தன்னுடைய கணவருடன் சரக்கடித்து கேண்டில் லைட் டின்னர், சூப்பரான சினிமா என பொழுதை கழிக்க ஆசையாக உள்ளது என்று தன்னுடைய விருப்பத்தை சொன்னார்.

அந்த பெண் மேலும் சொல்லும்போது, "எனக்காகவே என்னுடைய கணவர் குடியை விட்டுவிட்டார். ஆனால் நானே விரும்பினாலும் அவர் கல்யாணத்திற்கு பிறகு குடிப்பதில்லை.. என்னுடைய மாமியார் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் கிளைமேட்டிற்காக அவர் ரம் அடிப்பார், ஆனால் என்னுடைய கணவர், என்னுடைய விருப்பத்தை பூர்த்தி செய்யாமல் இருக்கிறார்" என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

குடிகார மாமியார்: இதைக்கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவுடையப்பன், ரொமான்சையும் லிக்கரையும் சேர்த்து பார்க்க வேண்டாம், கஷ்டப்பட்டு குடிப்பதை நிறுத்திய ஒரு மனிதனை மறுபடியும் அதற்குள் தள்ள வேண்டாம், மீண்டும் அந்த பழக்கத்திற்குள் சென்றுவிட்டால், அவரை மறுபடியும் திருத்துவது கஷ்டமாகிவிடும். மாமியாரை பார்த்து குடிக்க ஆசைப்படறதாக சொல்றீங்க, அவரை பார்த்து ஆசைப்பட வேற நிறைய விஷயங்கள் இருக்கலாமே, அதுக்காக இதையா சொல்லணும்?" என்று அந்த பெண்ணிற்கு அட்வைஸ் தந்திருந்தார்.

அதேபோல, கணவர்களிடம் உள்ள குறைகளை ஒரே வார்த்தையில் சிலேட் ஒன்றில் எழுதிகாட்டினார்கள் மனைவிகள். அதே போன்று மனைவியின் குறையை, ஒரே வார்த்தையில் சிலேட்டில் எழுதி காட்டினார்கள் கணவர்கள்..

குளிக்காத கணவன்: அதில் ஒரு பெண், தன்னுடைய கணவர் குளிக்கவே மாட்டேன்றான் சார் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.. அதற்கு ஆவுடையப்பன், அந்த கணவரை பார்த்து, "ஹீரோ மாதிரி ஜொலிக்கிறீங்களே சார்" என்றார்.

அதற்கு கணவர், "அதனால்தான் தான் சார் குளிக்கிறதில்லை" என்று பதில் சொன்னதுமே அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது.. அதேபோல, ஒரு கணவர், தன்னுடைய மனைவி ஆம்பளை மாதிரி நடந்து கொள்வதாக சொன்னார்.. உடனே சம்பந்தப்பட்ட மனைவியும், ஆண் தோரணையிலேயே நடந்து நடுவரையே அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+