தமிழா தமிழாவில் பரபரப்பு.. கேவலமான கருத்து சொன்ன பிரபலம்.. கோபப்பட்டு வெளியே அனுப்பிய ஆவுடையப்பன்
சென்னை: ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் விவாகரத்தால் கஷ்டப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது ஆண்கள் தரப்பில் இருந்த ஒரு நபர் சொன்ன வார்த்தையை கேட்டு கோபமான ஆவுடையப்பன் அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியே அனுப்பி இருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் அதிகமான விவாகரத்து அதிகரித்து வருகிறது. சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக விவாகரத்தை அறிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சாமானிய மக்கள் மத்தியிலும விவாகரத்து பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் கஷ்டம் ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்ற தலைப்பில் ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி விவாதம் செய்யப்பட்டது.

அப்போது பெண்கள் தரப்பில் பெண்கள் தான் விவாகரத்தால் அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என்று பேசி இருந்தார்கள். அதுபோல ஆண்கள் தரப்பில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகமான கஷ்டம் இருக்கிறது என்று பேசி இருந்தார்கள். அப்போது பெண்கள் தரப்பில் இருந்த ஒரு பெண் எனக்கு விவாகரத்து ஆகிய ஏழு வருடங்கள் ஆகிறது.
நான் முன்பு வசித்த பகுதியில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு வெளியே வந்துவிட்டேன். இப்போ மீண்டும் அதே பகுதியில் வந்திருக்கிறேன். என்னுடைய சின்ன மகன் வழக்கறிஞராக இருக்கிறார். என்னுடைய மகன் என் வீட்டிற்கு வருவதையே சிலர் தப்பாக பேசுகிறார்கள். இவ்வளவு பெரிய பையனா உனக்கு? என்று என்னிடமே கேட்கிறார்கள்.
ஆனால் என் முதுகுக்கு பின்னாடி என் மகன் என்று தெரியாமல் தவறாக பேசுகிறார்கள். இதற்கு காரணம் நான் விவாகரத்து செய்து விட்டேன் தனியாக இருக்கிறேன் என்ற ஒரே காரணம்தான். விவாகரத்தால் எங்களுக்கு பல வேதனைகள் இருக்கிறது என்று அந்த பெண் கண்ணீரோடு பேச அதற்கு எதிர் தரப்பில் இருந்த ஒரு நபர் நெருப்பு இல்லாமல் புகைச்சல் வராது உங்களை தப்பா பேசுறாங்கன்னா அங்க ஏதோ இருக்குன்னு தானே அர்த்தம் என்று சொல்ல அதனால் தொகுப்பாளர் ஆவுடையப்பன் கோபப்பட்டு இருக்கிறார்.
உங்க தங்கச்சி எதிர் தரப்பில் உட்கார்ந்து இருந்தால் நீங்க இந்த வார்த்தை சொல்லுவீங்களா? உங்க தங்கச்சியும் இதுபோல விவாகரத்து வாங்கி இருக்காங்க, அவங்களோட சொந்த பையனே அவங்கள பார்க்க வரும்போது அக்கம் பக்கத்தினர் அவங்க ரெண்டு பேரையும் இணைத்து பேசினாங்கன்னா அது சரின்னு நீங்க சொல்லுவீங்களா? என்று கேட்க,
அதற்கு அந்த நபர் என் அம்மாவா இருந்தாலும் சரி, தங்கச்சியா இருந்தாலும் சரி தப்புன்னா என்ன பொறுத்த வரையில் தப்புதான். யாரும் நெருப்பு இல்லாமல் புகைச்சல் பண்ண மாட்டாங்க என்று தான் சொன்ன வார்த்தை தான் சரி என்று சொல்ல, அதனால் கோபமான ஆவுடையப்பன் நீங்கள் பேசிய வார்த்தை தவறு இதை மன்னிப்பு கேட்டு திரும்ப பெற வேண்டும் என்று சொல்ல அதற்கு அந்த நபர் முடியாது நான் சொன்னது சரிதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு அவருடைய பெண் நீங்கள் சொன்ன வார்த்தையை திரும்ப பெறவில்லை என்றால் நிகழ்ச்சியில் இருந்து வெளியே போய்விடலாம் என்று சொன்னதும் அந்த நபர் தான் சொன்னதுதான் சரி என்பது போல நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார் இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அதிகமானோர் அந்த நபரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக விவாகரத்து ஆனால் ஆனால் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பிரச்சனை இருக்கதான் செய்கிறது. சமூகத்தில் இரண்டு தரப்பினர்களுக்கும் அதிகமான மன அழுத்தங்களும், பிரச்சனைகளும் வெளியே சொல்ல முடியாத அளவிற்கு இந்த விவாகரத்தால் இருக்கிறது. அதுபோல அம்மா, அப்பா விவாகரத்து செய்வதால் பிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் விவாகரத்து ஆகி கணவன் மனைவி பிரிந்து விட்டால் அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. அதை இவர்கள் இதனால் தான் பிரிந்து இருப்பார்கள்.. அதனால் தான் பிரிந்து இருப்பார்கள் என்று கட்டுக்கதை பேசி அடுத்தவர்களுடைய வாழ்க்கையை சீரழிப்பவர்கள் இன்னும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications