திடீர்னு "நெளிந்த" யானை.. மெல்ல திரும்பி பார்த்த இன்னொரு யானை.. கடைசி நிமிஷத்தில் திரண்ட "பாகன்கள்"
கோயில் திருவிழாவில் 2 யானைகள் மிரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
திருவனந்தபுரம்: கேரளாவில் கோயில் திருவிழாவில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி, பரபரப்பை கூட்டி வருகிறது.. அத்துடன், கோயிலில் திரண்டு வந்த பாகன்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.. என்ன நடந்தது?
பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி கிழக்கஞ்சேரியில் அமைந்துள்ளது திருவரை அம்மன் கோயில்.. இந்த கோயிலில் நிறைமாலை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இதற்காக சுற்றுவட்டார மக்கள் பெருமளவு திரண்டு வந்து திருவிழாவில் பங்கேற்பார்கள்.. அந்த வகையில், நேற்றைய தினம் திருவிழா களைகட்டியது..

யானை யானை
இந்த விழாவின்போது, அலங்கரிப்பட்ட 3 யானைகள் மீது அம்மன் வீதியுலா வந்தது... கோயிலின் அருகே யானைகள் வந்தபோது புத்தூர் தேவிநந்தன் என்ற யானை திடீரென மிரண்டு பிளிறியது.. பிறகு, பின்னாடியே வீதியுலா வந்த மற்றொரு யானையையும் தேவிநந்தன் ஓடிச்சென்று முட்டியது.. இதில் மற்றொரு யானை காயம் அடைந்ததுடன், அந்த யானையும் மிரண்டு கத்தியது.. இறுதியில் 2 யானைகளும் ஒன்றாக மிரண்டு தெருவில் ஓட ஆரம்பித்துவிட்டன.. ஓடும்போது, அங்கே கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 6 பைக்குகளையும் தூக்கிவீசின. அந்த பைக்குகள் கீழே விழுந்து நொறுங்கின..

உயிர்தப்பினர்
யானைகள் மிரண்டோடியதால் பக்தர்களும் அலறியடித்து கொண்டு தப்பியோடி உயிர்பிழைத்தனர்... தேவிநந்தன் யானை மீது 3 பக்தர்கள் வீதியுலாவில் உட்கார்ந்து வந்திருந்தனர்.. தேவிநந்தன் பிளிற தொடங்கியதுமே அதில் ஹரீஷ் என்பவரை கீழே தள்ளி சாய்த்தது.. இவர் ஆலத்தூர் காட்டுச்சேரியைச் சேர்ந்தவர்.. 35 வயதாகிறது.. உடம்பெல்லாம் படுகாயமடைந்த ஹரீஷை போலீசார் மீட்டு வடக்கஞ்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.. எனினும், மிரண்டிருந்த யானைகளை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.. அந்த கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நாகராஜர் கோயில் மேற்கூரையையும் இரண்டு யானைகளும் சேதப்படுத்தின.

ஏகப்பட்ட பாகன்கள்
இப்படியே 4 மணி நேரம் ஓடிவிட்டது.. பெரும்போராட்டத்திற்கு பிறகு, மிரண்டோடிய யானையின் அதன் பாகன்களான வாசு, பிரசாத்தும் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.. பிறகு, மற்ற யானை பாகன்களையும் ஸ்பாட்டுக்கு வரவழைத்தனர்.. அவர்களின் உதவியோடு யானைகளை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.. இறுதியில், எல்லா பாகன்களும் ஒருங்கிணைந்து, யானைகளை சங்கிலியால் பிணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதாவது, பாகன்கள் சமயோசிதமாக செயல்பட்டு, யானைகளை ஒருசேர அடக்கி, பக்கத்தில் இருந்த தூணில் கட்டியிருக்கிறார்கள்.. இல்லாவிட்டால் யானைகளை அடக்கி இருக்க முடியாதாம்.

மிரண்டு மிரண்டு
அதற்கு பிறகுதான் இயல்பு நிலை திரும்பி உள்ளது.. பொதுமக்களும், பக்தர்களும் நிம்மதியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இந்த திருவிழாவுக்காகவே ஸ்பெஷலாக கொண்டுவரப்பட்டதாம்.. ஒரு யானை மிரண்டதால்தான் இன்னொரு யானையும் மிரண்டதாக சொல்கிறார்கள்.. மிரண்ட யானை தேவிநந்தன், தன்னுடய தந்தங்களால் இன்னொரு யானையை கொடூரமாக தாக்கும் காட்சிகளும் வெளியாகி தற்போது இணையத்தில் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications