சபரிமலையில் 37 நாட்களில் வந்த பக்தர்கள் எவ்வளவு தெரியுமா?.. தேவஸ்தானத்தின் சூப்பர் அப்டேட்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டின் மண்டல காலத்தின் 37 நாட்களில் 29 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைவிட நான்கரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
உலகப் புகழ் வாய்ந்த சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ் வாய்ந்ததாகும். சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டு சபரிமலை மண்டல பூஜை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கியது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது.

மகரவிளக்கு, மண்டலபூஜை சீசன்களில் ஐயப்பனை தரிசனம் செய்ய கார்த்திகை மாதம் முதல் நாளில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவர். ஐயப்பனை தரிசிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கடுமையான விரதங்களை மேற்கொண்டு சபரிமலைக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வெடுப்பதற்காக ஆங்காங்கே இருக்கைகள், மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நாடு முழுவதும் இருந்து தினசரி சராசரியாக 70,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் நவம்பர் 16 ஆம் முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரையிலான கடந்த 29 நாட்களில் ரூ. 163.89 கோடி வசூலாகியுள்ளது. 22.67 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதேபோல, கடந்த ஆண்டை விட 4,51,043 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு சபரிமலை சீசனின்போது பக்தர்கள் காடுகள், சாலைகள், சபரிமலை பாதை என ஒவ்வொரு பகுதியிலும் 24 முதல் 36 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இச்சம்பவத்துகக்கு பல்வேறு மாநில அரசுகளும் கண்டனம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் இந்த ஆண்டு தீவிரப் படுத்தப்பட்டன. 18 ஆம் படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றும் பணிக்கு காவலர்கள் அமர்த்தப்பட்டனர். இதற்காக பயிற்சி பெற்ற சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதைத் தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்களிடமிருந்து இதுவரை எந்தவொரு புகாரும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 21 ஆம் தேதி வரை வரை 28 லட்சத்து 93 ஆயிரத்து 210 பேர் ஐயப்பனை தரிசித்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது நான்கரை லட்சம் அதிகமாகும். உடனடியாக முன்பதிவு செய்யும் முறையான ஸ்பாட் புக்கிங் முன்பதிவு மூலம் 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
புல் மேடு பாதை வழியாக 60 ஆயிரத்து 304 பக்தர்களளும், டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக ஒரு லட்சம் பக்தர்களும் தினந்தோறும் வருகை தந்துள்ளனர். அதேபோல, டிசம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் உடனடி புக்கிங் மூலமாக தினந்தோறும் சராசரியாக 22,000 பேர் வந்தனர். தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications