கோயில் விழாவில் மிரண்டு ஓடிய யானை தாக்கியதில் 3 பேர் உயிரிழப்பு.. கேரளாவில் மீண்டும் ஷாக் சம்பவம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் நடைபெற்ற திருவிழாவிற்கு யானைகள் அழைத்து வரப்பட்டன. கோயில் விழாவில் பட்டாசு வெடித்ததால் யானைகள் மிரண்டு ஓடின. இதில் ஒரு யானை தாக்கியதில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குருவங்கட் என்ற இடத்தில் மனக்குளங்கரை பகவதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். திருவிழாவின் போது வாணவேடிக்கையும் நடைபெற்றது.

வெடிச்சத்தம் அதிகமாக இருந்ததால், அங்கு ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் மிரண்டு ஓடின. இரண்டு யானைகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிலையில், பக்தர்கள் நின்று கொண்டிருந்த பகுதியை நோக்கி ஒரு யானை திடீரென ஓடியது. இதனால் பீதி அடைந்த பக்தர்கள் நாலாபுறமும் பதறியடித்துக்கொண்டு சிதறி ஓடினர். அப்போது யானை ஒன்று தாக்கியதில், 3 பேர் உயிரிழந்தனர். 36 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
மிரண்டு ஓடிய யானைகளை அரை மணி நேரத்திற்கு பிறகு யானை பாகன்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். யானை தாக்கியதில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணப்பட்டது. லீலா (வயது 65), அம்முகுட்டி அம்மா (70) மற்றும் ராஜன் என அடையாளம் காணப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோயிலின் நிர்வாக அலுவலக கட்டிடத்தையும் யானை முட்டி தள்ளியுள்ளது. இதில், அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.
கோயில் திருவிழாவில் யானை மிரண்டு ஓடிய காட்சிகளை அங்கிருந்த பக்தர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோயிலாண்டி நகராட்சி துணை சேர்மன் கே சத்யன் கூறியதாவது:- யானை தாக்கியதில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனயில் வைக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயரும் எனத்தெரிகிறது" என்றனர். கேரளாவில் ஏற்கனவே இதேபோன்று ஒரு சம்பவம் நடந்த நிலையில் தற்போது மீண்டும் நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications