கேரள மாநில புதிய அமைச்சரவை.. கடந்த முறை 2.. இந்த முறை 3 பெண்களுக்கு வாய்ப்பு
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் 3 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவருமே புதுமுகங்கள்.
Recommended Video
கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளாக பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்தது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் இடதுசாரிகளே ஆட்சியை பிடிக்கும் என கணிக்கப்பட்டது.
இதே நிலைதான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளிலும் இருந்தது. கொரோனா பரவலின் போது கேரளா மாடல் என்ற ஒரு நிலை உருவாகி அனைத்து மாநிலத்தவர்களும் அதை பின்பற்றும் அளவுக்கு பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி இருந்தது.

கொரோனா
இந்த நிலையில் கருத்துக் கணிப்புகளின் படி மீண்டும் இடதுசாரிகளே ஆட்சியை தக்க வைத்தன. கொரோனா இரண்டாவது அலை கடுமையாக உள்ள நிலையில் தற்போது யாருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கேரளா மாநிலம்
ஏனெனில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு இடதுசாரி கட்சி விதிகளின்படி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. எனவே சைலஜாவுக்கு இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் கேரளா மாநிலத்தின் அமைச்சரவை பட்டியல் வெளியானது.

பழைய அமைச்சர்கள்
அதில் பினராயி விஜயனை தவிர்த்து பழைய அமைச்சர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்த முறை புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 3 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த முறை 2 பேர்!
அவர்கள் டாக்டர் ஆர் பிந்து, சிஞ்சு ராணி, வீணா ஜார்ஜ். கடந்த முறை இரு பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த முறை 3 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் தவிர்த்து மொத்தம் 20 புதிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 12 பேர் மார்க்சிஸ்ட் கட்சியினர் , 4 பேர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆவர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications