சைக்கோ.. 56 பீஸ்.. ஆபாச வீடியோ.. கேரளாவில் நரபலி நடந்தது எப்படி? வழக்கை புரட்டி போட்ட "அந்த" காட்சி!
திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது தொடர்பாக அதிர்ச்சி அளிக்க கூடிய பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்மம் மற்றும் ரோஸ்லி. இவர்கள் இருவருமே அங்கு லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும்தான் சாபி என்ற இளைஞரால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர். இதில் பத்மம் கடந்த செப்டம்பர் மாதமும், ரோஸ்லி ஜூலை மாதமும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது. இந்த நரபலி பற்றிய கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
நரபலியில் கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடலும் நேற்று மீட்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கொலையை செய்த சாபி ஒரு சைக்கோபாத் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். மிக மிக கொடூரமாக இந்த கொலைகளை அவர் செய்துள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளனர். இரண்டு பெண்கள் உடலும் மோசமான நிலையில் இருந்துள்ளது. அவர்களின் அந்தரங்க உறுப்புகள் கூட சேதம் அடைந்த நிலையில் காணப்பட்டு உள்ளது.

கொலைக்கு முன்பாக இவர்கள் டார்ச்சர் செய்யப்பட்டு உள்ளனர். உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதில் சாம்பல் தடவி பூஜை செய்துள்ளனர்,.மொத்தம் 56 துண்டுகளாக ஒவ்வொரு உடலையும் வெட்டி உள்ளனர். இதில் அந்தரங்க உறுப்பையும் தனியாக வெட்டி எடுத்துள்ளனர். இதனை சாபி தனியாக செய்துள்ளார் . பகவான் சிங் அவரின் மனைவி லைலா ஆகியோர் பார்க்கும் விதமாக சாபி இதை செய்துள்ளார். பின்னர் உடல்களுக்கு பூஜை போட்டுள்ளார்.
பூஜை முடிந்ததும் அந்த உடல் பாகங்களை அவர்கள் சாப்பிட்டுள்ளனர். சில பாகங்களை எடுத்து கழுவி, ரத்தத்தோடு சாப்பிட்டு உள்ளனர். ஆனால் இதை இன்னும் உறுதி செய்யவில்லை. சாபி ஒரு கொடூரமான நபர். படங்களில் காட்டுவது போல அவர் சைக்கோ குணம் கொண்டவர் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதற்கு முன்னே அவர் மீது ரேப் தொடங்கி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக பெண்களை கடத்த முயன்றது, சீட்டிங் செய்தது, குடித்துவிட்டு பிரச்சனை செய்தது போன்ற புகார்கள் அவர் மீது உள்ளன. 8 வழக்குகள் அவர் மீது இப்படி உள்ளன. இதெல்லாம் போக வெளிப்படையாக அவர் மாந்த்ரீகம் செய்யப்படும் என்றும் விளம்பரம் கொடுத்து இருக்கிறார். பேஸ்புக்கிலும், பத்திரிகைகளிலும் மாந்த்ரீகம் செய்ய அணுகவும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார். பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் , இந்த நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் என்று விளம்பரம் செய்து உள்ளார்.
இதன் மூலம்தான் பகவான் சிங் மாற்று லைலா தம்பதிகளை கண்டுபிடித்து உள்ளார். அவர்களிடம் பேஸ்புக் மூலம் பேசி உங்களுக்கு மாந்த்ரீகம் செய்தால் பணம் வரும் என்று கூறி உள்ளார். இவர்கள் வியாபாரத்தில் ஏற்பட்ட லாஸ் காரணமாக சாபியை அணுகி உள்ளனர். அவரிடம் 1.50 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு, இவர் நரபலி பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இவர்களை எப்படி நரபலிக்கு அழைத்து வந்தேன் என்று சாபி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இரண்டு பெண்களுக்கும் வேலை கொடுப்பதாக சாபி கூறியுள்ளார். முதலில் அந்த பெண்கள் மறுத்துள்ளனர்.

பின்னர் ஆபாச வீடியோவில் லாட்டரி விற்பது போன்ற ஒரு காட்சிக்கான நீங்கள் நடிக்க வேண்டும். இதற்கு 10 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறி அந்த பெண்களை அழைத்துள்ளார். அவர்களை பகவான் சிங் வீட்டிற்கு அழைத்து சென்று, பின்னர் கட்டிப்போட்டு, நரபலி கொடுத்துள்ளனர். முதல் பெண்ணை ஜூன் மாதமும், இரண்டாவது பெண்ணை செப்டம்பர் மாதமும் நரபலி கொடுத்துள்ளனர்.
இதில் சிசிடிவி காட்சிகள்தான் வழக்கை புரட்டி போட்டுள்ளன. பத்மம் காணாமல் போன அன்று தனது வீட்டில் இருந்து ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளார். அந்த காரை சிசிடிவி மூலம் எங்கே சென்றது என்று கண்டுபிடித்து உள்ளனர். பின்னர் அந்த கார் பகவான் சிங் வீட்டிற்கு சென்றதை கண்டுபிடித்து உள்ளனர். அவருக்கு எதிர் வீட்டில் இருந்த நபரின் சிசிடிவி மூலம் இதை உறுதி செய்துள்ளனர். இதை வைத்தே அந்த கும்பலை பிடித்து விசாரித்து உண்மையை வர வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications