Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலையில் அள்ளும் கூட்டம்.. 7 நாள்களில் பக்தர்கள் வருகை எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாள் தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 7 நாட்களில் 7. 25 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 41 நாள்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன்படி இந்தாண்டில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி பக்தர்களுக்காக நவம்பர் 15 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 18 ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐயப்பன் சிலைக்கு நெய் அபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கப்பட்டது.

sabarimalai devottes

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலைக்கு படை எடுத்து வருகின்றனர். சபரிமலை தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு இருக்கைகள் வைக்கப்பட்டு, மூலிகை குடிநீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு ஆறு நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலையில் டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி வரை 7 லட்சத்து 25 ஆயிரத்து 261 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.

ஜனவரி 6 ஆம் தேதி ஒரே நாளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 12 பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஜனவரி 5 ஆம் தேதி 90 ஆயிரத்து 678 ஆக இருந்தது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் எப்போதும் மரக்கூட்டம் வரை பக்தர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். ஐயப்பனைக் காண 7 மணி நேரம் வரை காத்திருந்து தரிசிக்கின்றனர். அதேபோல, எருமேலி, புல்மேடு பாதைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

புல்மேடு பாதையில் சத்திரம் பகுதியில் இருந்து காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், எரிமேலியில் இருந்து பெருவழிப் பாதையில் முக்குழியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சபரிமலையில் உள்ள அப்பம் அரவணை கவுன்டர்கள், சன்னிதான்ம், மாளிகைப்புறம், வாவர் நடை மைதானம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.

பம்பையில் பக்தர்களின் வசதிக்காக 7 ஸ்பாட் புக்கிங் கவுன்டர்கள் செயல்படுகிறது. அங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் திருவேணி சங்கமம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால், பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். புல்மேடு பகுதியில் சிக்கிய தமிழக பக்தர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையை சேர்ந்த லீலாவதி, ஆண்டனி, பெரியசாமி, மதுரையைச் சேர்ந்த லிங்கம் ஆகிய நான்கு பேர் உரக்குழியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் துாரத்தில் தொடர்ந்து செல்ல முடியாததால் சிக்கியுள்ளனர். வனத் துறையினர் அளித்த தகவலில் நான்கு பேரும் மீட்கப்பட்டு சபரிமலை சன்னிதானத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+