திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ராஜி.. ராஜி".. 71 வயசு தாத்தாவுக்கு வந்த சபலம்.. பியூட்டி பார்லர் லேடியாம்.. கடைசியில் மானமே போச்சு

71 வயது நபரை மிரட்டி பணம் பறித்த பெண்ணை கேரள போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ராஜி மாதிரி பெண்கள் ஆபத்தானவர்கள்.. ஆனால், இவர்களை போன்றவர்கள் மக்களோடு மக்களாகவே கலந்திருப்பதால், யாராலும் எளிதில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடிவதில்லை.. அதனால்தான், இதுபோன்ற பெண்களால் பாதிக்கப்படுவோர்களின் லிஸ்ட்கள் அதிகமாகி கொண்டே போகிறது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் இந்த ராஜி... எருமப்பட்டி - திப்பிலசேரி பகுதியில் வசித்து வருகிறார்.. 35 வயதாகிறது..

குந்நங்குளம் என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்... இவருக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் உண்டு..

 பியூட்டி பார்லர்

பியூட்டி பார்லர்

அதில் ஒரு ஆண் நண்பர் மூலம், ஒரு தாத்தா நட்பாகி உள்ளார்.. அந்த தாத்தாவுக்கு 71 வயதாகிறது.. சாவக்காடு பகுதியை சேர்ந்தவர்.. ரொம்ப வசதியானவராம்.. 20 வருடங்களாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இவரிடம் ராஜி மிகவும் நெருக்கமாகி உள்ளார்.. ஒருகட்டத்தில் ராஜியின் பியூட்டி பார்லர் ரூமிலேயே இருவரும் தனிமையாக இருந்து வந்துள்ளனர்..

 பியூட்டி பார்லர்ரூம்

பியூட்டி பார்லர்ரூம்

உல்லாசமாக இருக்கும்போது, அந்த போட்டோக்களை ராஜி தன்னுடைய செல்போனில் எடுத்து கொள்வாராம்.. இதற்கு பிறகு, அந்த நிர்வாண போட்டோக்களை, தாத்தாவிடமே காண்பித்து, பணமிரட்டல் விடுத்துள்ளார்.. 50 லட்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.. இல்லாவிட்டால், போட்டோ, வீடியோக்களை, சொந்தக்காரர்கள், சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடுவதாக மிரட்டி உள்ளார்.. இதனால் தாத்தா நடுநடுங்கி போய்விட்டார்.. 50 லட்சம் மொத்தமாக தர முடியாத சூழலில் இருந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக பணம் தந்துள்ளார்..

 ராஜி.. ராஜி..

ராஜி.. ராஜி..

3 லட்சம் ரூபாய் வரை ராஜி பறித்துள்ளார்.. ஆனால், அதற்குமேல் பொறுமை இழந்த தாத்தா, நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுவிட்டார்.. குந்நங்குளம் போலீசில் நடந்ததையெல்லாம் சொல்லி புகார் அளித்துள்ளார்.. இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் ராஜியை கைது செய்தனர்... விசாரணையும் துவங்கினர்.. பணத்திற்காக இதுபோன்ற வசதியானவர்களுக்கு வலையை விரிப்பதும், சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களிடம் நெருங்கி பழகி, பின்பு மிரட்டி பணம் பறிப்பதும் என வாடிக்கையாக இருந்துள்ளார்.

 ஆண் நண்பர்

ஆண் நண்பர்

இதற்கு உதவியாக ஆண் நண்பர் ஒருவரும் இருந்துள்ளார்.. யாரெல்லாம் வசதியானவர்கள், சபலபுத்தி உடையவர்கள் என்பதை நோட்டமிட்டு, அவர்களை பற்றி தகவலை ராஜியிடம் சொல்வாராம் இந்த நண்பர்.. பிறகு ஒருநாள் ராஜியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் வைப்பாராம்.. அந்தவகையில், இவர்தான் அனைத்துக்கும் காரணமாக இருந்துவந்ததால், போலீசார் இவரை கைது செய்ய மும்முரமாகி உள்ளனர்.. ஆனால், அதற்குள் இவர் தலைமறைவாகிவிட்டதால் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள். இந்த முதியவரைப் போன்று வேறு யாரிடம் எல்லாம் ராஜி பணம் பறித்து ஏமாற்றியுள்ளார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
71 year old man threatened with RS 50 lakh by 35 year old woman and kerala police arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X