13 பேர் உடல் சிதறி பலி.. கேரளா திரிச்சூரில் பயங்கரமாக வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. பலர் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திரிச்சூரில் பூரம் விழாவையொட்டி பட்டாசு தயாரிக்கப்பட்ட இடத்தில் இன்று திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கேரளா மாநிலத்தில் பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் பூரம் விழாவையொட்டி திரிச்சூர் மாவட்டம் முண்டதிகோட் பகுதியில் பட்டாசு சேமிப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் இன்று பட்டாசு தயாரிப்பு பணி நடந்தது.
திருவாம்படி தேவசாமிற்காக அவர்கள் பட்டாசு தயாரித்தனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தான் திடீரென்று பட்டாசுகள் வெடித்து சிதறின. இதுபற்றி பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் காயமடைந்து துடிதுடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கேரளா தீயணைப்பு வீரர்கள், கேரளா மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பற்றி எரிந்த பட்டாசு குடோனை தண்ணீர் விட்டு அணைத்தனர். அதன்பிறகு மீட்பு பணி தொடங்கியது. மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் 17 பேர் லேசான காயமடைந்துள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை. அதேவேளையில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்து 24 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications