அரசு பேருந்தில் தோளில் உரசியபடியே மறு கையால் சுய இன்பம் செய்த இளைஞர்! பிரபல நடிகை ஆதாரத்துடன் புகார்
திருவனந்தபுரம்: கேரளா அரசு பேருந்தில் பயணித்த நடிகை நந்திதா சங்கராவிடம் தாடி வைத்த இளைஞர் ஒருவர் ஆபாசமான சைகைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அவரை போலீஸிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூரிலிருந்து கொச்சி செல்வதற்காக பிரபல நடிகையும் மாடல் அழகியுமான நந்திதா சங்கரா அரசு பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே தாடி வைத்திருந்த இளைஞர் சவாத் ஷா அமர்ந்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞர் சவாத், நந்திதாவிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் நடித்த படங்களை பார்த்திருப்பதாகவும் நன்றாக நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அந்த நபர் திடீரென நந்தினாவின் கை மீது உரசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்திதா நெளிந்தபடியே தள்ளி உட்கார்ந்தார். அப்போது அந்த இளைஞர் மறு கைகளால் பேன்ட் ஜிப்பை கழற்றி சுயஇன்பம் செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்திதா, உடனே செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். இதனால் உஷாரான அந்த இளைஞர் நைசாக ஜிப்பை மூடிவிட்டார்.

இதையடுத்து நந்திதா அந்த இளைஞர் குறித்து பேருந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் புகார் தெரிவித்தார். அப்போது நடத்துநர் அந்த இளைஞரிடம் விசாரித்த போது தான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்றும் தான் ஜிப்பை திறக்கவில்லை என கூறி மூடியிருந்த பேண்ட் ஜிப்பை காண்பித்தார். இதையடுத்து அந்த பேருந்து நின்றது. உடனே அந்த இளைஞர் இறங்கினார்.
அவரை பிடித்த நடத்துநர் போலீஸில் ஒப்படைக்க முற்பட்டார். அப்போது அவரை தள்ளிவிட்டுவிட்டு அந்த இளைஞர் தப்பியோடினார். இருந்தாலும் விடாபிடியாக ஓட்டுநரும் நடத்துநரும் சேர்ந்து போய் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அப்போது விசாரணையில் முதலில் தான் எதையும் செய்யவில்லை என அந்த இளைஞர் தெரிவித்தார்.

ஆனால் போலீஸாரின் தீவிர விசாரணையில் அந்த நடிகை அழகாக இருந்ததால் அப்படி செய்தேன் என ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து நந்திதா கூறுகையில் பெண்களுக்கு எதிரான இது போன்ற பாலியல் சீண்டல்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நான் நடத்துநர், ஓட்டுநரிடம் தெரிவித்தவுடன் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அந்த இளைஞரை பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து எனது நண்பரிடம் தெரிவித்த போது அவர்தான் தைரியமாக வீடியோ எடு என கூறினார். இதையடுத்து நான் வாட்ஸ் ஆப் கால் போட்டேன், அவர்தான் வீடியோ எடுத்தார். முன்பெல்லாம் இது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானால் , அதற்கு அந்த பெண் குறித்து தவறாக கருத்துகளே நிறைந்திருக்கும். ஆனால் தற்போது இது போன்ற ஆபாச செய்கை நிகழ்வுகளை மக்கள் புரிந்து கொண்டு தட்டிக் கேட்கிறார்கள். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. என் முகம் சமூகவலைதளங்களில் வருவதில் எனக்கு பிரச்சினை இல்லை. குற்றவாளிகள் தப்ப கூடாது என்றார்.

-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications