திடீரென உடைந்த ஹெலிபேட்.. சபரிமலை புறப்பட்ட ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது சிக்கல்
திருவனந்தபுரம்: ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று கேரளா சென்றுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இந்நிலையில் தான் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது கான்கிரீட்டில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக ஹெலிபேட் சேதமடைந்தது. இதனால் ஹெலிகாப்டர் சக்கரம் கான்கிரீட் தளத்தில் சிக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் பயணம் செய்தார். அதன்பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் பத்தனம்திட்டாவில் உள்ள பிரதமம் உள்விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்து ஹெலிபேட்டுக்கு சென்றார்.

ஜனாதிபதி திரெளபதி முர்முவை ராணுவ ஹெலிகாப்டர் அழைத்து சென்றது. திரெளபதி முர்முவின் ஹெலிகாப்டர் தரையிறங்க வசதியாக தற்காலிகமாக ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது. பிரதமம் மைதானத்தில் கான்கிரீட் போட்டு ஹெலிபேட் அமைக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை 9.05 மணிக்கு திரெளபதி முர்முவின் ஹெலிகாப்டர் அங்கு பிரச்சனையின்றி தரையிறங்கியது. திரெளபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி சென்றார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் கான்கிரீட் ஹெலிபேட் திடீரென்று உள்ளே அமுங்கியது. இதனால் ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் சிக்கி கொண்டது.
இதையடுத்து அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகள் ஓடிவந்து ஹெலிகாப்டரை தள்ளி சேதமான கான்கிரீட் தளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. முன்னதாகவே, ஜனாதிபதி திரெளபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் பம்பை நோக்கி புறப்பட்டு சென்றார். அவரது பயணத்தில் எந்த தாமதமும் ஏற்படவில்லை.
இதுபற்றி அதிகாரிகள் தரப்பில், ‛‛முதலில் நிலக்கல் பகுதியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஹெலிகாப்டர் இறங்குவதாக கூறப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. இதனால் பிரமதம் உள்விளையாட்டு அரங்கில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது. இந்த ஹெலிபேட் அமைக்கும் பணி சில மணிநேரங்களுக்கு முன்பு தான் முடிக்கப்பட்டது. இதன் காரணமாக தான் ஹெலிபேட்டின் கான்கிரீட் தளம் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் சேமதடைந்துள்ளது'' என்று கூறினர்.
பம்பை செல்லும் ஜனாதிபதி திரெளபதி முர்மு அங்குள்ள புனித ஆற்றில் நீராடாமல் பாதங்களை மட்டுமே கழுவ உள்ளார். அதன்பிறகு அங்குள்ள கணபதி கோவிலில் இருந்து இருமுடி சுமந்து சன்னிதானம் சென்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய உள்ளார். சன்னிதானத்துக்கு அவர் குர்கா
அவசர நான்கு சக்க வாகனத்தில் செல்ல உள்ளார்.
அவரது பாதுகாப்பாக 6 வாகனங்கள் செல்ல உள்ளன. காலை 11.50 மணிக்கு திரெளபதி முர்மு சன்னிதானத்தை அடைய உள்ளார். அங்கு அவருக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட உள்ளது. பிறகு அவர் 18 படிகள் வழியாக சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய உள்ளார். பிறகு தேவசம்விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து அங்கிருந்து அவர் மீண்டும் பம்பை வழியாக பிரதமம் மைதானம் வந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications