கேரளா இல்லை கேரளம்.. பெயரை மாற்றியது பினராயி விஜயன் அரசு! 2வது முறையாக மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என அம்மாநில அரசு கடந்த ஆண்டு மாற்றம் செய்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. இதில் சில குறைகள் இருப்பதாக மத்திய அரசு கூறியிருந்த நிலையில், தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான மாநிலம் கேரளா. அங்கு தமிழ்நாடு மாதிரி பெரும் தொழில் வளர்ச்சி இல்லை என்றாலும் கூட, தனிமனித வருமானம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் அம்மாநிலம் தேசிய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு ஆட்சி மொழியாக மலையாளம் இருக்கிறது. கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. மலையாளத்தில் இம்மாநிலத்திற்கு 'கேரளம்' என்று பெயர்.

ஆனால் ஆங்கிலத்தில் கேரளா என்றுதான் அழைக்கப்படுகிறது. அதேபோல அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை 'கேரளம்' என்று மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு அம்மாநில சட்டமன்றத்தில் இது தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்தார். அதன்படி இனி மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழியிலும் கேரளாவை, 'கேரளம்' என்றுதான் அழைக்கப்பட வேண்டும். இதற்கான மாற்றத்தையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள சட்டப் பேரவையில் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தீர்மானம் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அது நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தில் சில குறைகள் இருப்பதாக கூறிய மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பிவிட்டது. இதனையடுத்து இந்த குறைகள் திருத்தப்பட்டு மீண்டும் இன்று அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு இந்த தீர்மானம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், "மலையாளத்தில் எங்களது மாநிலத்தின் பெயர் கேரளம். கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் நாள் மொழிவாரியாக கேரளம் பிரிக்கப்பட்டது. இதே நாளில்தான் நாங்கள் 'கேரளப்பிறவி' தினத்தை கொண்டாடுகிறோம். மலையாளம் பேசும் மக்களுக்கு 'கேரளம்' தேவை.
சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே எங்களின் தாய்மொழி வலுவாக இருந்தது. ஆனால், அரசியலமைப்பின் முதல் அட்டவணை மாநிலத்தின் பெயரை, 'கேரளா' என குறிப்பிடுகிறது. எனவே அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் இந்த பெயரை 'கேரளம்' என திருத்தம் செய்ய அவசர நடவடிக்கை தேவை" என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications