சர்ச்சையை ஏற்படுத்திய கொலை வெறி பேச்சு.. மன்னிப்பு கேட்டார் கேரள நடிகர்!!
சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டாக வெட்டுவோம் என்று கூறிய கேரள நடிகர் கொல்லம் துளசி மன்னிப்பு கோரியுள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டாக வெட்டுவோம் என்று கூறிய கேரள நடிகர் கொல்லம் துளசி மன்னிப்பு கோரியுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஆனால் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு ஒரு சாரார் ஆதரவு தெரிவித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என பெண்களே பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2 துண்டுகளாக
இந்நிலையில் மலையாள நடிகரும், பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை இரண்டு துண்டுகளாக வெட்ட வேண்டும்.

மற்றொன்று டெல்லிக்கு
ஒன்றை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டை டெல்லிக்கும் அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

பெரும் சர்ச்சை
நிகழ்ச்சியில் கூடியிருந்த பெண்களை பார்த்து பேசிய அவர், ஆனால் எனக்கு தெரியும் நீங்கள் யாரும் அங்கு செல்லமாட்டீர்கள். நீங்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள், சூழ்நிலையை உணர்ந்தவர்கள் என்றார். நடிகர் கொல்லம் துளசியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மன்னிப்பு கேட்டார்
இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் தான் பேசியது தவறுதான் என நடிகர் கொல்லம் துளசி, மன்னிப்பு கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications