பிரபல நடிகர் பாண்டியராஜன் ஞாபகம் இருக்கா.. வடிவேலுவை விடுங்க. டீக்கடையில் "யாரு சாமி நீ".. அதுக்கு?
திருவனந்தபுரம்: டீக்கடைக்கு. டீ குடிக்க வந்தவரை பற்றி தகாத வார்த்தையால் அங்கிருந்தவர்கள் பேசிவிட்டார்கள்.. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பதிலடியாக என்ன செய்தார் தெரியுமா? அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரல் சமாச்சாரம்.
நடிகர் பாண்டியராஜன் நடித்த 'நீலக்குயில்' படத்தில் ஒரு காமெடி சீன் வரும்.. அந்த படத்தில் வடிவேலுவின் பாட்டி இறந்துவிடுவார்.. பாட்டி இறந்ததை கேள்விப்பட்டதுமே, வடிவேலு கதறி அழுது கொண்டே வீட்டுக்குள் ஓடிவருவார்.
அப்போது, வடிவேலுவின் துக்க வீட்டிற்கு எதிர்வீட்டில் திருமண விழா நடந்து கொண்டிருக்கும்.. அந்த வீட்டில் திருமணம் என்பதால், மைக் செட் போட்டு பாடல்களை சத்தமாக ஒலிபரப்பு செய்து கொண்டிருப்பார்கள்.

காதை பிளந்த சத்தம்: இதைப் பார்த்த நடிகர் வடிவேலு திருமண வீட்டிற்கு சென்று, "எதிரே துக்கவீடு இருக்கு, பாட்டி செத்துப்போயிட்டாங்க.. அவங்க சடலத்தை எடுக்கும்வரையாவது பாட்டு சத்தத்தை குறைவா வைங்க" என்பார்.. ஆனால், அதை திருமண வீட்டினர் காதில் வாங்கவே மாட்டார்கள், தொடர்ந்து திருமண வீட்டில் மைக் செட்டில் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இதனால் ஆத்திரமடைந்த வடிவேலு, தனனுடைய துக்க வீட்டில் மைக் செட்டுகளை, ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுவார்.. துக்க வீட்டு வருபவர்கள் எல்லாரும் அந்த மைக்கில் அழுவார்கள்.. இப்படி ஒப்பாரி சத்தத்தை வைத்தே, எதிர்வீட்டு திருமணத்தை நிறுத்தி விடுவார்..
டீக்கடை : கிட்டத்தட்ட இதுபோலவே ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியில் சேர்ந்தவர் ஜான் ரவி.. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.. அப்போது, ஜான் ரவியை பார்த்து, டீக்கடையில் இருந்தவர்கள், அவதூறாக பேசியதாக பேசியதாக தெரிகிறது.. தன்னை பற்றி அவதூறாக பேசியது, ஜான் ரவிக்கு ஆத்திரத்தை தந்தது.. அதனால், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் நினைத்த ஜான், அதற்கான சரியான நேரத்தையும் எதிர்நோக்கி கொண்டிருந்தார்.. அதன்படி, மைக் செட் ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.. அந்த ஸ்பீக்கர்களை தன்னுடைய ஸ்கூட்டரில் பொருத்திக் கொண்டார்..
நேராக அந்த டீக்கடைக்கு போனார்.. தன்னை அவதூறாக பேசிய அந்த கடைக்கு எதிரே மைக் செட் பொருத்திய வண்டியை நிறுத்திவனார்.. மைக்கை ஆன் செய்து தன்னை பற்றி அவதூறாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சரமாரியாக பதில் தர ஆரம்பித்துவிட்டார்.. அவதூறாகப் பேசியவர்களை மைக்கில் பிடிபிடியென ஜான்ரவி பிடித்துவிட்டார்.. தன்னை பற்றி கேவலமாக ஜான் ரவி மைக்கில் பேசிக்கொண்டே போகவும், அந்த டீக்கடைக்காரர் டென்ஷன் ஆகிவிட்டார்.. உடனடியாக போலீசுக்கு போய் புகாரும் தந்துவிட்டார்.

தகாத வார்த்தை: தன்னை தகாத வார்த்தைகளால் ஜான் ரவி பேசியதாக சொல்லி, காயங்குளம் ஸ்டேஷனில் டீக்கடை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசியதாக ஜான் ரவி மீது காயங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜான் ரவியின் மைக் செட்டை அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஜான் ரவி பேசியதை டீக்கடைக்கு வந்திருந்தவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விட்டனர்.. அவமானத்தால் கூனிக்குறுகியதால், இப்படி பதிலடியை ஜான் ரவி தந்துள்ளது சீரியஸான விஷயம் என்றாலும், அவர் தந்த பதிலடி இணையவாசிகளை ரசிக்க வைத்து வருகிறது.. அதுதான் இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டுமிருக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications