திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னை கொல்ல பார்க்கிறாங்க.. அந்த விஐபி பெயரை விரைவில் வெளியிடுவேன்.. சரிதா நாயர் பகீர்

விஷம் வைத்து தன்னை கொல்ல முயன்றதாக சரிதா நாயர் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவின் சரிதா நாயர் திடீரென ஒரு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. தன்னை யாரோ கொலை செய்ய முயற்சித்ததாக இவர் தெரிவித்துள்ளதையடுத்து அம்மாநிலத்தில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

கேரளாவின் முன்னாள் முதல்வர் காங்கிரசைச் சேர்ந்தவர் உம்மன்சாண்டி... இவர்மீதும், அப்போதைய அமைச்சர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டை நடிகை சரிதா நாயர் கூறியிருந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

இதுதொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் அந்நாட்களில் வெளியாகி மீடியாவில் முக்கிய இடத்தை பெற்று வந்தன. இந்த வழக்கு விசாரணை பல வருட காலம் கேரளாவில் நடந்து வருகிறது.. தற்போதும் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

1 ஓமிக்ரான்.. 12 சந்தேக கேஸ்கள்.. தமிழ்நாட்டில் மீண்டும் வருமா லாக்டவுன்? தயார் நிலையில் பெட்கள்! 1 ஓமிக்ரான்.. 12 சந்தேக கேஸ்கள்.. தமிழ்நாட்டில் மீண்டும் வருமா லாக்டவுன்? தயார் நிலையில் பெட்கள்!

நிலுவை

நிலுவை

இதைதவிர, சரிதா நாயர் மீது ஏராளமான வழக்குகள் பல போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது.. தமிழ்நாட்டில்கூட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, சூரிய மின்சக்தி வசதி செய்து தருவதாகக் கூறி சோலார் பேனல் எனப்படும் சூரியஒளி தகடுகள் அமைத்துத் தரும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சோலார்

சோலார்

இது தொடர்பாக சரிதா நாயர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கோழிக்கோடைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் 2012-ல் போலீஸில் அளித்த புகாரில் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சோலார் பேனல் வசதி செய்து தருவதாக கூறி ரூ.42.70 லட்சம் பெற்றதாகவும் ஆனால், சொன்னபடி செய்யாததோடு பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் புகார் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு சரிதா நாயர் பல முறை ஆஜராகவில்லை.

வழக்கு

வழக்கு

இந்த வழக்கு கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. இந்த வழக்கில் சரிதா நாயர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், இவரது இன்னொரு வழக்கு கொட்டாரக்கரை கோர்ட்டில் நடந்து வருகிறது.. அதாவது, கடந்த 2015ல், கொட்டாரக்கரை அருகே காரில் சென்று கொண்டிருந்தார் சரிதா நாயர்.. அப்போது, நடுராத்திரி அவரது காரை ஒரு கும்பல் வழிமறித்து, சரிதா நாயகரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் கோர்ட்டில் நடந்து வருகிறது.

விசாரணை

விசாரணை

நேற்றும் விசாரணை நடந்த நிலையில், சரிதாநாயர் கோர்ட்டில் ஆஜாரானர். அப்போது திடீரென ஒரு குற்றச்சாட்டை கூறினார்.. அவர் சொன்னதாவது: "எனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடந்தது.. இதனாலேயே எனக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. பிறகு வேலூர், திருவனந்தபுரத்தில் இதற்காகவே சிகிச்சை பெற்று வருகிறேன். உடல்நிலை தேறியதும் எனக்கு விஷம் தந்தது யார் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பேன் என்றார்.

English summary
Actress Saritha nair claims that there was an attempt to poison her
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X