ரஜினிக்கு நீங்க தான் மனைவி.. வீடியோ காலில் நின்றது அந்த நடிகையா? என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா?
திருவனந்தபுரம்: இந்தியாவில் நாளுக்கு நாள் பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் அரெஸ்ட் உள்ளிட்ட மோசடி சம்பவங்களில் சிக்கி படித்த பலரே பணத்தை இழந்த சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க வைப்பதாக கூறி நடிகை ஒருவரை வீடியோ காலில் வர வைத்த மர்ம கும்பல் அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்துள்ளது தற்போது அம்பலம் ஆகியுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களால் கடும் மன உளைச்சலில் இருந்த இயக்குனர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஜெயிலர் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார். ரஜினிகாந்த்துக்கும் மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றுக் கொடுத்தது.

இதனால் மகிழ்ந்து போன அந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த், நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசளித்து மகிழ்ந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற காவலா பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன், சிவ்ராஜ் குமார், விநாயகன், தமன்னா மோகன்லால் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்த நிலையில் இந்திய அளவில் படம் வசூலில் சக்கை போடு போட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். முதல் பாகத்தில் ரஜினிகாந்த்-க்கு மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் ஜோடியாக இணைந்து இருக்கிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் மனைவியாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மலையாள நடிகையிடம் பணம் பறிக்க மோசடி முயற்சி நடந்து இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை ஷைனி சாரா பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். ஜெய்லர் 2 படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடிப்பதற்கு உங்களை செலக்ட் செய்து இருக்கிறோம் என அவரது வாட்ஸ்ஆப்க்கு மெசேஜ் வந்திருக்கிறது.
அதனை நம்பிய அவர் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது உங்களிடம் நடிகர் சங்கத்தின் உறுப்பினர் கார்டு இருக்கிறதா என கேட்டிருக்கிறார்கள். இல்லை என கூறியதால் அதற்கு நாங்கள் ஏற்பாடு செய்வோம் எனவும் சுரேஷ்குமார் என்பவர் உங்களை தொடர்பு கொண்டு பேசுவார் என அந்த கும்பல் கூறி இருக்கிறது. தொடர்ந்து இரண்டு நாள் கழித்து சுரேஷ்குமார் என்பவர் நடிகை ஷைனியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது சேலை அணிந்து வீடியோ காலில் வர வேண்டும் என கூறி இருக்கிறார்கள். அதனை நம்பி சைனிஷாவும் வீடியோக் காலில் பேசியிருக்கிறார். தொடர்ந்து ரஜினிகாந்த் மனைவியாக நடிக்க உங்களை செலக்ட் செய்து விட்டோம் எனக் கூறி இருக்கிறார்கள். இந்த நிலையில் மிகப்பெரிய நடிகரின் படத்துக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவார்களா என உஷாரான அவர் ஏற்கனவே வெளியான ஜெயிலர் முதல் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் தானே நடித்திருந்தார் இப்போது நான் எப்படி நடிக்க முடியும் என கேட்டுள்ளார்.
இல்லை உங்களை வேறொரு கேரக்டரில் நடிக்க வைக்கிறோம் எனக் கூறி நடிகர் சங்கத்தின் உறுப்பினர் அட்டை பெற வேண்டும் என்றால் 12,500 ரூபாயை உடனே அனுப்ப வேண்டும் என கூறி இருக்கிறார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அவர் பணத்தை இரண்டு மூன்று நாட்களில் தருகிறேன் எனக் கூறியிருக்கிறார். தொடர்ந்து அவர்கள் தற்போதைக்கு கொஞ்சம் பணமாவது கொடுங்கள் எனக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் உறுதியாக தனது தொலைபேசி எண்ணை ஆப் செய்து விட்டு பிற நடிகைகளிடம் விசாரித்திருக்கிறார்.
அப்போது படங்களில் நடிக்க நடிகர் சங்க உறுப்பினர் அட்டை அவசியம் இல்லை எனவும் உங்களை யாரோ ஏமாற்ற பார்க்கிறார்கள் என கூறி இருக்கிறார். இதை அடுத்து சுரேஷ்குமாரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவருக்கு செல்போனின் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. நடிகையான என்னையே ஏமாற்றுகிறார்கள் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும் என அந்த நடிகை தற்போது பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications