திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளே போகாதீங்கம்மா.. பெண்களின் காலில் விழுந்து ஆதிவாசிகள் போராட்டம்.. சபரிமலையில் பரபரப்பு!

சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களின் காலில் விழுந்து ஆதிவாசிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலைக்குள் பெண்கள் நுழைய கூடாது.. கேரளாவில் சட்டசபை முற்றுகை-வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களின் காலில் விழுந்து ஆதிவாசிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கோவிலுக்குள் பெண்கள் வர வேண்டாம் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது.

    இதனால் அங்கு போராட்டம் வலுத்து இருக்கிறது. சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது.

    போர்க்களமான சபரிமலை.. போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை போர்க்களமான சபரிமலை.. போராட்டக்காரர்களுக்கு கேரள அரசு எச்சரிக்கை

    ஆதிவாசிகள் போராட்டம்

    ஆதிவாசிகள் போராட்டம்

    இந்த போராட்டத்தை பாஜக முன்னின்று நடத்தி வருகிறது. ஆனாலும் ஆதிவாசிகள் கணிசமான அளவில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். நிலக்கல் பகுதியில் ஆதிவாசிகள் பலர் காலம்காலமாக வசித்து வருவதால் அவர்களுக்கு இந்த தீர்ப்பு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவிலை சுற்றி இருக்கிறார்கள்

    கோவிலை சுற்றி இருக்கிறார்கள்

    இவர்கள் கோவிலை சுற்றி அரம் போல பாதுகாத்து நிற்கிறார்கள். கோவிலின் எல்லா நுழைவாயில் பக்கமும் இவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். என்ன நடந்தாலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஆதிவாசி மக்கள் போராடி வருகிறார்கள். ஆயிரக்கணக்காக மக்கள் இதற்காக களமிறங்கி உள்ளனர்.

    காலில் விழுந்தனர்

    காலில் விழுந்தனர்

    இதனால் இன்று கோவிலை நோக்கி வந்த பெண்கள் காலில் விழுந்து இருக்கிறார்கள் அங்கு இருக்கும் பூர்வகுடி ஆதிவாசி மக்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் வயதான ஆதிவாசி மக்கள் கூட, எல்லா வயது பெண்கள் காலிலும் விழுந்து உள்ளனர். தயவு செய்து கோவிலுக்குள் செல்ல வேண்டாம் என்று மன்றாடி கேட்டுள்ளனர்.

    உறுதி

    உறுதி

    என்ன நடந்தாலும் கோவிலின் புனிதத்தை காப்போம் என்று அவர்கள் கூறியுள்ளனர். கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். கோவிலின் பாரம்பரியத்தை காக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயார் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

    English summary
    Adivasi's protesting against women entering into Sabarimala temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X