கேரளா: மாவோயிஸ்டுகள்- போலீசார் இடையே கடும் துப்பாக்கி சண்டை- 2 பேர் சிக்கினர்- தப்பிய 3 பேர் எங்கே?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் மாநில போலீசாருக்கும் இடையே நேற்று இரவு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டுகள் சிக்கினர். தப்பி ஓடிய மேலும் 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் கடும் தாக்குதல்களை மீறி சுமார் 70%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. மேலும் சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் துணை ராணுவத்தினர் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் கேரளா மாநில வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தலப்புழா காவல்நிலை எல்லைகுட்பட்ட வனப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த மோதல் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தன. வயநாடு வனப்பகுதியில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே 4-வது முறையாக துப்பாக்கி சண்டை நிகழ்ந்துள்ளது.
இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிக்கினர். மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய 3 மாவோயிஸ்டுகளை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக கேரளா போலீசார் தெரிவித்தனர்.
கோழிக்கோட்டில் மாவோயிஸ்டுகளுக்கு உதவிய சிலரை முதலில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்தான் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பது உறுதியானது. இதனையடுத்து கோழிக்கோட்டில் சிக்கிய நபர்களுடன் வயநாடு சென்று போலீசார் மாவோயிஸ்டுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுதான் மாவோயிஸ்டுகளுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது என விவரிக்கின்றனர் கேரளா போலீசார்.
தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டு வனப்பகுதிக்குள் தப்பி இருக்கக் கூடும் என்பதால் தமிழக போலீசாருக்கும் கேரளா போலீசார் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications