12 மணி நேரத்தில் 38 ஆயிரம் பேர்.. காட்டிக்கொடுத்த ஏஐ கேமரா.. நெளியும் சேட்டன்கள்.. ஓ இதுதான் விஷயமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறையை அந்த மாநில அரசு கையாண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் விதி மீறும் வாகன ஓட்டிகள் அடையாளம் காணப்பட்டு அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.
விபத்துக்களுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது போக்குவரத்து விதி மீறல்களாகத்தான் உள்ளது. எனவே போக்குவரத்து விதி மீறலை கட்டுப்படுத்தி விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து விதி மீறல்களை குறைக்க மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பிடிப்பதற்காக புதிய நடைமுறையை அம்மாநில போக்குவரத்து துறை கையாள தொடங்கியுள்ளது. நகரின் முக்கிய இடங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மாநிலம் முழுவதும் 726 இடங்களில் இந்த கேமராக்கள் உள்ளன.
சோலார் மின்சக்தி மூலம் இயங்கும் இந்த கேமராக்கள் 4 ஜி இணயவசதி உதவியுடன் தரவுகளை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி விடும். அதாவது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது, செல்போனில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவது, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, சிக்னல் ஜம்பிங் செய்வது, அதிவேகத்தில் செல்வது உள்ளிட்ட சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை இனி போலீசார் மறித்து அபராதம் போட மாட்டார்கள்.
விதி மீறும் பயணிகள் இந்த கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும் அபராதம் விதிக்கப்படாமல் வெறும் வார்னிங் மட்டும் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 5) முதல் செயற்கை நுண்ணறிவு கேமராவை பயன்படுத்தி அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது. ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், சிக்னலில் வெள்ளைக் கோட்டை தாண்டி நிற்பவர்கள் என ஒரு விதி மீறலும் பயணிகள் ஈடுபட்டாலும் நேரடியாக ஏஐ கேமரா காட்டி கொடுத்து விடும்.

ஏ.ஐ கேமரா மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறை கேரளாவில் அமலுக்கு வந்த முதல் 12 மணி நேரத்திற்குள் 38 ஆயிரத்து 520 வாகன ஓட்டிகள் சிக்கியுள்ளனர். அதிகபட்சமாக கொல்லத்தில் 4,778 வாகன ஓட்டிகளுக்கு செல்லான்கள் பதிவு ஆகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரத்தில் (4,362) திரிசூரில் (3,995) கண்ணூரில் (2,437 ) கோட்டயத்தில் (2,194) பாலக்காட்டில் (1,007), காசர்கோட்டில் (1,040) மலப்புரம் 545 விதி மீறல்களும் பதிவாகியுள்ளன. அமல்படுத்திய 12 மணி நேரத்தில் 38 ஆயிரம் போக்குவரத்து விதி மீறல்கள் பதிவாகியிருப்பது கேரளவில் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications