அலறவிடும் நிபா வைரஸ்! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு ஓடுங்க! கொரோனாவை விட கொடூரமானது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் நேற்று முன்தினம் தெரிவித்தார். இந்தாண்டு நமது நாட்டில் நிபா வைரசால் ஏற்படும் இரண்டாவது உயிரிழப்பது இதுவாகும். நிபா வைரஸ் ஏன் ஆபத்தானது. அதன் அறிகுறி சிகிச்சை உள்ளிட்டவை குறித்து நாம் பார்க்கலாம்.
மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அங்குப் பலருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் கடந்த 2018 முதலே அவ்வப்போது நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. 2018ல் முதலில் கோழிக்கோட்டில் வைரஸ் பரவியது. இதனால் ஓரிரு உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளது.
நிபா வைரஸ்: நிபா வைரஸ் என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும். இது எப்படிப் பரவுகிறது. இதன் தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நிபா வைரஸ் ஆபத்தானது ஏன்.. இதில் என்ன சிக்கல் உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முன்பே குறிப்பிட்டது போல நிபா வைரஸ் என்பது ஜூனோடிக் வைரஸ் ஆகும்.. அதாவது இது வௌவால்கள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.. இது பன்றிகளைப் பாதித்து, அதன் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதனால் லேசான அறிகுறிகள் முதல் மூளைக்காய்ச்சல் வரை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம். நிபா வைரஸ் அசுத்தமான உணவு மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
முதலில் எப்படிப் பரவியது: மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் முதலில் நிபா வைரஸ் பாதித்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நிபா பாதிப்பு ஏற்பட்ட பன்றிகளுடன் கொண்ட தொடர்பு காரணமாகவே அப்போது மனிதர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதிப்புகள் வௌவால்கள் மூலம் ஏற்பட்டுள்ளது. விலங்குகளைப் பராமரிப்போர் மற்றும் அதற்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு எளிதாக ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
அறிகுறிகள்: நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோருக்குக் கடுமையான சுவாச பிரச்சனைகள் முதல் மூளையழற்சி வரை ஏற்படும். தொடக்கத்தில் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை வலி ஆகியவை கூட ஏற்படும். தொடர்ந்து தலைச்சுற்றல், தூக்கப் பாதிப்பு உள்ளிட்ட நரம்பியல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
சில அரிய நிகழ்வுகளில் வலிப்பு கூட ஏற்படலாம். அடுத்த 2 நாட்களில் கோமாவில் விழுந்து சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியா பாதிப்பும் கூட ஏற்படலாம். இந்த பாதிப்புகள் 4 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை இருக்கும். சில அரிய கேஸ்களில் இது 45 நாட்கள் வரை கூட இருக்கலாம்.
ஆபத்தானது ஏன்: கொரோனாவை விட நிபா வைரஸ் வேகமாகப் பரவாது என்ற போதிலும், நிபா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் ரொம்பவே அதிகம். நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டோரில் சுமார் 35% முதல் 75% வரை உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. கொரோனாவுக்கு இது 1.04%ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிபா வைரஸ் தொற்றுக்குக் குறிப்பிட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களை அழிப்பது வைரஸ், பாதிப்பு ஏற்பட்டோர் தனிமைப்படுத்துவது ஆகியவை மட்டுமே நிபா வைரஸ் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆகும்.
-
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications