வங்கதேசமா நீ? வடமாநில புலம்பெயர் தொழிலாளியை அடித்தே கொன்ற கேரளா கும்பல்.. பின்னணியில் ஆர்எஸ்எஸ்?
திருவனந்தபுரம்: சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 31 வயது நிரம்பிய புலம்பெயர் தொழிலாளியை திருடன் என சந்தேகப்பட்டு, வங்கதேசத்தை சேர்ந்தவரா என கேள்வி கேட்டு கிராம மக்கள் அடித்து கொன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில் பலரும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினரால் அவர் பலியாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே வாழையார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 17 ம் தேதி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது கிராம மக்களுக்கு திடீரென்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை பிடித்து சிலர் விசாரித்தனர்.

அப்போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கும்பல் அந்த நபரை சரமாரியாக அடித்து தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்த நபர் இறந்து போனார்.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அடித்து கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் ராம்நாராயணன் பாஹேல். வயது 31. இவர்
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தை சேர்ந்தவர்.
புலம்பெயர் தொழிலாளியான ராம்நாராயணன் பாஹேல் கேரளாவுக்கு வேலைக்கு வந்தார். வாழையார் போலீஸ் எல்லைக்குட்பட்ட ட்டபாலம் அருகே உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடி வந்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. வழக்கம்போல் கடந்த 17 ம் தேதி வேலை தேடிய அவர் வழித்தவறி பக்கத்து கிராமத்துக்கு சென்றார். அங்கு அவரை கிராம மக்கள் திருடன் என்று நினைத்தனர். மேலும் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கேள்வி கேட்டு தாக்கி உள்ளனர். இதில் ராம்நாராயணன் பாஹேல் இறந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவரது உடலில் உள்பகுதியில் ஏற்பட்ட படுகாயம் மற்றும் உடலில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறியது தான் மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதனால் ராம்நாராயணன் பாஹேலின் உடலை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்தவுடன் நேற்று வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன், அவரது குடும்பத்தினரிடம் பேசினர். அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு தருவதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் உடலை வாங்கி கொள்வதாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலமாக சத்தீஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபற்றி பாலக்காடு எஸ்பி அஜித் குமார் கூறுகையில், ‛‛சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு துணை எஸ்பி தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இன்னும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த நபரின் ஜாதியை அறிந்து தேவை என்றால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும்'' என்றார்.
இதற்கிடையே தான் ராம்நாராயணன் பாஹேலை கொன்றதன் பின்னணியில் சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாலக்காட்டை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், உள்ளாட்சி நிர்வாக துறை அமைச்சருமான எம்பி ராஜேஷ் சங்பரிவார் அமைப்பினரை குற்றம்சாட்டி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சங் பரிவாரின் வெறுப்பு அரசியல் காரணமாக புலம்பெயர் தொழிலாளர் பலியாகி உள்ளார். அவர் பங்களாதேஷி என்று முத்திரை குத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த குற்ற பின்புலம் கொண்டவர்களும் அடங்குவர். இதனால் சங் பரிவாரால் பரப்பப்படும் இனவெறுப்புக்கு அவர் பலியாகி உள்ளார்'' என்று கூறியுள்ளார். ஆனால் அதனை போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications