ராணுவ வீரரை தாக்கிய பிஎஃப்ஐ அமைப்பினர்? திடீரென நடந்த ட்விஸ்ட்! உண்மையை விளக்கிய கேரள போலீஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் ராணுவ வீரர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது முதுகில் மர்மநபர்கள் PFI என எழுதப்பட்ட விவகாரம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் இச்சம்பவம் ஒரு நாடகம் என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கேரளாவில் விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக பரவிய தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து பாஜகவினர் இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு பேரணியும் நடத்தியிருந்தனர். ஆனால் இந்த சம்பவம் திட்டமிட்ட நாடகம் என்று காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கேரள மாநிலம் கடைக்கால் பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஷைன் குமார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்ப இருந்த அவர், கடைக்கால் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், சுமார் 6 பேர் கொண்ட கும்பல் தன்னை வழிமறித்து, சரமாரியாக தாக்கி, தன்னுடைய முதுகில் PFI என்று எழுதியதாகவும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். PFI எனப்படுவது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எனும் பெயரின் சுருக்கமாகும். இது ஒரு இஸ்லாமிய அமைப்பாகும்.
சமீபத்தில் இந்த அமைப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு முடக்கியது. இது ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இது உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுகிறது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வந்ததையடுத்து தென்னிந்தியாவில் பெரும்பாலான இடங்களில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ரெய்டு மேற்கொண்டு இந்த இயக்கத்துடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்தன. இப்படி இருக்கையில் ராணுவ வீரர் ஒருவர் இந்த அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் தேசிய அளவில் கவனம் பெற்றது.

பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பாஜகவினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி கேரளாவில் காவல் நிலையத்தை நோக்கி பேரணி நடத்தினர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. கொட்டாரக்கரா DySP ஜி.டி.விஜயகுமார், ஆய்வாளர் பி.வி.ராஜேஷ் ஆகியோர் வழக்கை விசாரிக்க தொடங்கினர். தடயவியல் துறையினரும் வழக்கின் முக்கிய தடயங்களை தேடினர்.
தொடர் விசாரணையில் இந்த புகார், ராணுவ வீரர் தாக்கப்பட்டது, PFI இயக்கத்தினர் இதில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது என அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "இது ஒரு திட்டமிட்ட நாடகம். இதில் ராணுவ வீரர் ஷைனுக்கு உதவியது அவரது நண்பர் ஜோஷி என்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். நேற்று தொடங்கி இன்று காலை வரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அதேபோல ராணுவ வீரர் தாக்குதலுக்கு உள்ளான இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினருக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை. இப்படியான தாக்குதல் சம்பவம் நடந்ததற்கான அடிப்படையான ஆதாரங்களே கிடைக்கவில்லை. ராணுவ வீரர் ஷைன் தனது நண்பர் ஜோஷிக்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பும்போது தாக்குதல் நடந்ததாக கூறியிருந்தார். எனவே நாங்கள் ஜோஷியிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் இவை அனைத்தும் நாடகம் என்பது தெரிய வந்தது.
அதாவது ஜோஷியை வைத்து ராணுவ வீரர் ஷைன் தனது முதுகில் PFI என்று எழுத சொல்லியிருக்கிறர். முதலில் ஜோஷி DFI என்றுதான் எழுதியிருக்கிறார். பின்னர், D எனும் எழுத்தை P என மாற்றியுள்ளார். பிறகு தன்னை அடிக்குமாறு ஜோஷியிடம், ஷைன் கேட்க அதை ஜோஷி செய்ய மறுத்திருக்கிறார். இறுதியாக வேறு வழியின்றி தனது வாயில் தானே டேப்பை ஒட்டிக்கொண்டிருக்கிறார் ஷைன். அதன் பின்னர் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்" என்று கூறியுள்ளனர்.
உண்மை தெரிய வந்ததையடுத்து ராணுவ வீரர் ஷைன் மற்றும் அவரது நண்பர் ஜோஷி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகதான் இப்படி செய்ததாக ஷைன் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications