இனிக்க இனிக்க பேசிய கிரீஷ்மா! ஜூஸால் பலியான ஷரோன்! கலகலத்த கேரளா! வீட்டில் எகிறிக் குதித்த ‘முகமூடி’

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம் : தமிழக - கேரள எல்லையான பாறசாலை பகுதியில் காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், சீல் வைத்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் முறியங்கரை பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது இளைய மகன் ஷரோன் ராஜ். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ரேடியாலஜி இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஷரோனுக்கும் உடன் பயின்று வந்த காரகோணம் பகுதியை சேர்ந்த கீரிஷ்மா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஷரோனும், கீரிஷ்மாவும் கல்லூரிக்கு செல்லாமலும், வீட்டிற்கு தெரியாதவாறும் காதலித்து வந்துள்ளனர்.

காதல் கொலை

காதல் கொலை

இந்த நிலையில் கீரிஷ்மாவுக்கு மற்றொரு நபருடன் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் ஷரோன் ராஜ், கீரிஷ்மாவின் காதலில் இடையே விரிசல் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த 17ம் தேதி, தனது ரெக்கார்ட் புத்தகங்களை வாங்குவதற்காக ஷரோன் அவரது நண்பர் ரெஜினுடன் சேர்ந்து கீரிஷ்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கீரிஷ்மா ஷரோனுக்கு குடிக்க குளிர்பானம், கஷாயம் மற்றும் பழம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.

மரணத்தில் சந்தேகம்

மரணத்தில் சந்தேகம்

இதனை சாப்பிட்டுவிட்டு தனது நண்பன் பைக்கில் செல்ல புறப்பட்டபோதே தனக்கு வயிறு வலிப்பதாக நண்பன் ரெஜினிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் வீட்டிற்கு சென்ற ஷரோன் மயங்கி விழுந்த நிலையில், பாறசாலை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் உயர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து ஷரோனின் தந்தை ஜெயராஜ், பாறசாலை போலீசில், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்தார்.

திடுக்கிடும் தகவல்

திடுக்கிடும் தகவல்

இதனை தொடர்ந்து கீரிஷ்மாவையும், அவரது உறவினர்களையும் மற்றும் ஷரோன் ராஜ் நண்பர்களிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வேறு ஒருவருடன் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டதால் காதலை விட சொல்லி, தான் பல முறை கூறிய போதும் ஷரோன் கேட்காமல் தன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வற்புறுத்தியதாகவும், அதனால் தன்னுடைய தாத்தா பயன்படுத்தி வந்த கஷாயத்தை தான் குடித்து சாக போகிறேன் என்று கிரீஷ்மா மிரட்டியதாகவும், அதை தடுத்த ஷரோன் கிரீஷ்மாவின் கையில் இருந்த கஷாயத்தை வாங்கி குடித்ததாகவும் முதலில் தெரிவித்தார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

ஆனால் போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரனையில் கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து ஷரோனை கொன்றதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையே க்ரிஷிமாவின் ஜாதகத்தை பெற்றோர் பார்த்தபோது அவருக்கு 2 தார தோஷம் இருப்பதாகவும், இதனால் முதல் கணவன் இறந்துவிடுவார். இரண்டாவது திருமணம் தான் நீடிக்கும் எனவும் ஜோசியர் கூறியதால் தனது காதலனை முதல் கணவனாக்கி உடனே கொலை செய்துவிட்டால் தற்போது நிச்சயம் செய்துள்ள மணமகனை திருமணம் செய்யும்போது தனக்கு எந்த பிரச்சினையும் வராது என திட்டமிட்டுள்ளார். இதனால் அவசரமாக தனக்கு தாலி கட்டும்படி கூறிய கீரிஷ்மா, ஒரு சில நாட்களில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாகவும் தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

 ஆதாரங்கள் அழிப்பு

ஆதாரங்கள் அழிப்பு

அதன்பிறகு ஆபாச வீடியோக்கள் இருந்ததால் அவரை கொலை செய்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து இளம்பெண் கீரிஷ்மாவை நெடுமங்காடு போலீசார் கைது செய்தனர். கழிப்பறைக்கு செல்லவேண்டும் என கூறி சென்ற கீரிஷ்மா அங்கிருந்த கழிப்பறை சுத்தம் செய்யும் மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிகிறது. தற்போது இந்த வழக்கின் விசாரணை தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், ஷரோன் கொல்லப்பட்ட கீரிஷ்மாவின் சொந்த ஊரில் சீல் வைத்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ஆதாரத்தை அழிக்க முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் கீரீஷ்மா 7 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+