• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாத்ரூமில் பிணமாக தொங்கிய பெண்.. நைட் நான் உயிரோடு இருப்பேனான்னு தெரியல.. பகீர் ஆடியோ!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: அடுத்தடுத்து இளம்பெண்கள் உயிரிழந்து வரும் நிலையில், கேரளாவில் இன்னொரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சமீப காலமாக கேரளாவில் இளம் பெண்களின் மரணங்கள் அதிகரித்தபடியே உள்ளன.. குறிப்பாக 2 மாதத்துக்கு முன்பு, அடுத்தடுத்து மூன்று இளம்பெண்கள் இறந்தனர்..

கலங்கிப்போன ஓபிஎஸ்.. அடுத்தடுத்து சோக நிகழ்வுகள்; பன்னீர் செல்வம் குடும்பத்தில் 6 மாதங்களில் 3 மரணம் கலங்கிப்போன ஓபிஎஸ்.. அடுத்தடுத்து சோக நிகழ்வுகள்; பன்னீர் செல்வம் குடும்பத்தில் 6 மாதங்களில் 3 மரணம்

இவர்கள் 3 பேருமே வரதட்சணை கொடுமையினால் உயிரிழந்தனர்.. 22 வயது மாணவி விஸ்மயா.. 24 வயது இளம்பெண் அர்ச்சனா, 19 வயதான சுசித்ரா என அடுத்தடுத்த பெண்கள் உயிரிழந்தனர்..

 சந்தேகம்

சந்தேகம்

3 பேருமே வரதட்சணை பிரச்சனையால்தான் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.. 3 பெண்களின் மரணங்களும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில், இந்த மரணங்களினால் நாடெங்கிலும் கண்டனமும் எழுந்தது... இப்போது இன்னொரு இளம்பெண்ணின் மரணம் ஏற்பட்டு, அம்மாநில மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது... அவர் பெயர் சுனிஷா. இவருக்கும் இதே பிரச்சனைதான் மாமியார் வீட்டில் ஏற்பட்டுள்ளது.

சித்ரவதை

சித்ரவதை

சுனிஷாவுக்கும் கன்னூர் மாவட்டம் பையனூரை பூர்வீகமாக கொண்ட விஜீஷ் என்பவருக்கும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது... அப்போதிருந்தே சுனிஷாவுக்கு மாமியார் வீட்டில் கொடுமைகள் தொடங்கிவிட்டது. அடிக்கடி அம்மா வீட்டுக்கு போன் செய்து, சுனிஷா அழுவாராம்.. நடக்கும் கொடுமையை எல்லாம் சொல்லுவாராம். பெற்றோரும் சுனிஷாவுக்கு அவ்வப்போது ஆறுதல் சொல்லி வந்துள்ளனர்.

 ஹெல்மெட்

ஹெல்மெட்

கணவன் விஜீஷ் அதிக அளவு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.. சுனிஷாவை கடுமையாக அடித்து தாக்குவாராம்.. மாமியாரும், சுனிஷாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குவாராம்.. மாமனாரும் ஹெல்மெட்டாலேயே ஒருமுறை அடித்துள்ளதாக தெரிகிறது.. அடிக்கடி அம்மா வீட்டிற்கு போன் செய்து, நடக்கும் சம்பவங்களை சொல்லியதால், ஆத்திரத்தில் சுனிஷாவின் செல்போனையும் நொறுக்கிவிட்டார்களாம்.

சித்ரவதை

சித்ரவதை

நாளுக்கு நாள் சுனிஷாவுக்கு சித்ரவதைகள் அதிகமாகி உள்ளது.. ஒரு மாசமாக சாப்பாடு கூட போடவில்லையாம்.. கடைகளில் பார்சல் வாங்கிதான் சாப்பிட்டு வந்துள்ளார் சுனிஷா.. ஒருகட்டத்தில் எல்லைமீறவும், மனம் உடைந்துபோன சுனிஷா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்... அதற்கு முன்னதாக ஒரு ஆடியோ மெசேஜை, தன்னுடைய அண்ணனுக்கு சுனிஷா அனுப்பி வைத்துள்ளார்.

அவலம்

அவலம்

அதில், "உன்னால் முடிந்தால் இப்பவே தயவுசெய்து வந்து என்னை கூட்டிட்டு போயிடு.. அவரும், என் மாமியாரும் என்னை சரமாரியாக அடித்து நொறுக்கிவிட்டனர்... இன்னைக்கு நான் நான் உயிரோடு இருப்பேனான்னுகூட தெரியல" என்று தெரிவித்திருக்கிறார்... மேலும் மாமியார் வீட்டில் நடந்த அனைத்து அவலங்களையும் சொல்லி அழுதுள்ளார்..

புகார்

புகார்

இதனால் பதறிப்போன குடும்பத்தினர், விரைந்து வந்து பார்ப்பதற்குள், பாத்ரூமில் தூக்கில் பிணமாக தொங்கிவிட்டார் சுனிஷா. சுனிஷாவின் சடலத்தை கண்டு, அவரது குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்.. பையனூர் ஸ்டேஷன் வரை சென்று உதவி, மகளுக்காக உதவி கேட்டார்களாம்..

 குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஆனால், மாமியார் வீட்டினர் அரசியல் செல்வாக்கை பெற்றிருப்பவர்கள் என்பதால், போலீசார் தயங்கினார்களாம். எந்த உதவியையும் சரியாக செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. 3 முறை புகார் தந்துட்டோம்.. ஒன்னும் பலனில்லை.. இன்னைக்கு எங்க பிள்ளையை இழந்துட்டோமே என்று கதறி அழுதனர்.. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக கண்ணூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

English summary
Audio released and Young woman suicide in Kerala due to family issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X