ஆயுஷ் செயலாளரை நீக்குங்கள்.. தமிழக அதிகாரிக்கு அங்கு போஸ்டிங் போடுங்கள்.. சசி தரூர் அதிரடி!
திருவனந்தபுரம்: இந்தி தெரியாத தமிழ் மருத்துவர்களை வெளியேறும்படி கூறிய ஆயுஷ் அமைச்சக செயலாளரை மாற்றிவிட்டு அந்த இடத்தில் தமிழக சிவில் சர்வண்ட் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோட்சே இந்தியில் வகுப்புகளை நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் உட்பட நாடு முழுக்க பல்வேறு அரசியல் தலைவர்கள் இவருக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை சேர்ந்த மருத்துவர்கள் கோட்சேவிடம் ஆங்கிலத்தில் பேசும்படி கூறியுள்ளனர். இதற்கு கோட்சே கோபமாக, ஆங்கிலம் எனக்கு சரியாக தெரியாது, இந்தியில்தான் பேசுவேன், கேட்க முடியாது என்றால் மீட்டிங்கில் இருந்து கிளம்புங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டில், மத்திய அரசின் செயலாளர் ஒருவர் அரசு வீடியோ கருத்தரங்கில் இந்தி புரியாத தமிழர்களை வெளியேறும்படி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அரசுக்கு கொஞ்சமாவது கண்ணியம் இருந்தால், அந்த செயலாளரை பணியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் ஒரு தமிழ் சிவில் சர்வன்ட் பணியாளரை பணியில் அமர்த்த வேண்டும்.
கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தியாவின் ஒற்றுமையை ஆட்சியில் இருந்து வன்முறையாளர்கள் கூட்டம் (tukde -tukde gang) காலி செய்ய பார்க்கிறதா?, என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications