மாநில பாடத்திட்டத்தில் குஜராத் கலவரம்-கோட்சே பற்றிய பாடம் இடம்பெறும்.. மத்திய அரசை அதிர வைத்த கேரளா
திருவனந்தபுரம்: குஜராத் கலவரம், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட சில பாடங்களை மத்திய அரசின் என்.சி.இ.ஆர்.டி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தது. அப்போது பெரும் சர்ச்சையை இது கிளப்பிய நிலையில், மாநில பாடத்திட்டங்களில் இந்த பாடங்களை சேர்க்க முடிவு செய்து இருப்பதாக கேரளா அதிரடியாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில், என்.சி.இ.ஆர்.டி தயார் செய்யும் சிலபஸ் பின்பற்றப்படுகின்றன. அதேபோல், மாநில அரசுகள், தங்களுக்கென தனியாக பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. மாநில அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் இந்த பாடங்களே கற்பிக்கப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த முறைதான் பின்பற்றப்படுகின்றன. அண்மையில் என்.சி.இ.ஆர்.டி பாடங்களில் இருந்து சில சாப்டர்கள் நீக்கப்பட்டன.

இந்த நிலையில், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட பாடங்களை மாநில பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்து இருப்பதாக கேரளா அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து கேரள மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் வி சிவன் குட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- குஜராத் கலவரம், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், ஜவஹர்லால் நேரு ஆட்சி காலத்தில் இந்தியா உள்ளிட்ட பாடங்களை மீண்டும் மாநில பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்.
இந்த பாடங்களை மத்திய அரசு தனது பாடத்திட்டத்தில் இருந்து அகற்றியிருந்தது. பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து இந்த மேற்கூறிய பாடங்களை மத்திய அரசு நீக்கியது தொடர்பாக பாடத்திட்டங்களை தயார் செய்யும் குழு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பிறகு இது குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. மாநில பாடத்திட்டத்தில் குஜராத் கலவரம், காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பாடங்களை சேர்க்க இந்த துணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
புதிய பாடப்புத்தகங்கள் இந்த சாப்டர்களையும் சேர்த்து தயார் செய்யப்பட்டு வருகிறது. ஓணம் விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு இந்த புதிய புத்தகங்கள் கிடைக்கும்" என்றார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தங்களது பாடத்திட்டத்தில் இருந்து குஜராத் கலவரம், முகலாயர் குறித்த சில பாடங்கள், எமெர்ஜென்சி, நக்சலைட் இயக்கம், சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு உள்ளிட்ட பல பாடங்களை நீக்குவதாக அறிவித்தது.
இது கடும் சர்ச்சையாகவும் பேசு பொருளாகவும் மாறியிருந்தது. இந்த நிலையில், தான் கேரள அரசு, மத்திய கல்வி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சில பாடங்கள் மீண்டும் மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications