Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவனந்தபுரத்தின் புதிய மேயர் - துணை மேயரை அறிவித்த பாஜக.. கம்யூ., 45 ஆண்டு ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியை 45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. இந்நிலையில் தான் முதல் முறையாக அந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. இந்நிலையில் தான் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக பாஜக சார்பில் விவி ராஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் துணை மேயர் வேட்பாளராக பாஜகவின் ஆஷா நாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் உள்ளார். இந்நிலையில் தான் சமீபத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் இடதுசாரிகளின் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்தது.

bjp-announces-thiruvananthapuram-mayor-candidate-is-v-v-rajesh-and-deputy-is-asha-nath

காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கேரளாவில் அதி்க இடங்களை கைப்பற்ற நினைத்த பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் கூட திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. இந்த திருவனந்தபுரம் மாநகராட்சி 45 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அதனை உடைத்து பாஜக வாகை சூடியது.

மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் மெஜாரிட்டிக்கு 51 வார்டுகளில் வெல்ல வேண்டும். ஆனால் 100 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. இதில் பாஜக கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 19 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து புதிய மேயர், துணை மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை பாஜக மேற்கொண்டது. இந்நிலையில் தான் புதிய மேயர் வேட்பாளராக பாஜக சார்பில் விவி ராஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை மேயராக பெண் கவுன்சிலர் ஆஷா நாத் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விவி ராஜேஷ் பாஜக சார்பில் கொடுங்கனூர் வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு வயது 49. இவர் 1996ம் ஆண்டில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தற்போது 2வது முறையாக கொடூங்கனூர் வார்டில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாஜகவின் மாநில செயலாளராக இருக்கும் விவி ராஜேஷ் பல்வேறு அமைப்பு சார்ந்த பொறுப்புகளையும் வகித்த அனுபுவம் கொண்டவர். குறிப்பாக திருவனந்தபுரம் மாவட்ட பாஜக தலைவராக செயல்பட்டவர்.

அதுமட்டுமின்றி கேரளா மாநில பாஜகவின் இளைஞர் அணியின் தலைவராகவும் அவர் செயல்பட்டார். கடந்த முறை மாநகராட்சியில் எதிர்க்கட்சி கவுன்சிலராக சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக முன்னாள் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு எதிராக முறைகேடு புகார்களை அவர் மக்களிடம் எடுத்து சென்றார். இதனால் தற்போது அவருக்கு மேயர் பதவியை பாஜக வழங்கி உள்ளது.

அதேபோல் துணை மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆஷா நாத், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாபனாம்கோட் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆஷா நாத் 3வது முறையாக கவுன்சிலராக உள்ளார். இவர் பிஎஸ்சி படிப்பை வேதியியல் பாடத்தில் முடித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் எஸ் சுரேஷ் இன்று வெளியிட்டடார். பாஜக சார்பில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வென்ற கவுன்சிலர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு இருவரின் பெயரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக பாஜக சார்பில் ஓய்வு டிஜிபி ஆர் ஸ்ரீலேகா மேயர் வேட்பாளராக ஆக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இவர் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் சாஸ்தாமங்களம் வார்டில் வெற்றி பெற்றார். ஆனால் தற்போது அவருக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை.

இதன் பின்னணியில் 2 முக்கிய விஷயம் உள்ளது. ஒன்று அனுபவம் இன்னொன்று இடஒதுக்கீடு. ஸ்ரீலேகாவிற்கு அரசியல் அனுபவம் இல்லை. இதனால் அனுபவம் வாய்ந்த விவி ராஜேஷ்க்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2வது காரணம் என்னவென்றால் இடஒதுக்கீடு. திருவனந்தபுரம் மாநகராட்சியில் துணை மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் ஸ்ரீலேகாவை மேயராக்கினால் இரு பதவிகளிலும் பெண்கள் இருப்பார்கள். அதேபோல் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீலேகாவிற்கு துணை மேயர் பதவி வழங்குவது பொருத்தமாக இருக்காது. இதனால் தான் ஸ்ரீலேகாவிற்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவி கிடைக்கவில்லை.

மேலும் ஸ்ரீலேகாவை வைத்து பாஜக மேலிடம் இன்னொரு கணக்கும் போடுகிறது. விரைவில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஸ்ரீலேகாவாவை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளராக்க நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி வாடியூர்காவு அல்லது திருவனந்தபுரம் மத்திய சட்டசபை தொகுதியில் அவர் வேட்பாளராக்க பாஜக மேலிடம் பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+