கேரளாவை அலறவிடும் மூளையைத் தின்னும் அமீபா.. தொடரும் உயிர் பலிகள்.. நீர்நிலைகளில் ரொம்ப கவனம்
சென்னை: கேரள மாநிலத்தில் பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா தொற்று காரணமாக தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த தொற்று காரணமாக மூன்று பேர் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், இந்த தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்று பரவி வருகிறது. இதனால், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. Naegleria fowleri என்ற இந்த அமீபா மூளையை அப்படியே மெல்ல தின்றுவிடும். ஏற்கனவே கேரளாவில் இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு தாமரச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி உயிரிழந்தார்.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபரான சுல்தான் பத்தேரியைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்னைகள் இருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அமீபா தொற்றால் 11 பேர் நோயின் அறிகுறிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மூளையைத் தின்னும் அமீபா காய்ச்சலால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சலான சுகாதாரமற்ற நீர்நிலைகளின் மூலமாக பரவுகிறது. அசுத்தமான ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வவியாக இந்த தொற்றானது உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களின் மூலமாகவும் பரவும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தொற்றானது உடலுக்குள் சென்று மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை கொன்றுவிட்டு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர், காய்ச்சல், தலைவலி, வாந்தி, அதீத சளி, கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியக மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும்.
உரிய சிகிச்சை பெறவில்லை எனில் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மனிதர்கள் மூலம் தொற்றக்கூடிய நோய் அல்ல. நன்னீரில் மட்டுமே உயிர் வாழக்கூடியது. உப்பு நீரில் இவ்வகையான அமீபா உருவாவதில்லை. அசுத்தமான நீரில் குளிக்கும்போது, முகம் கழுவும் போது உடலின் வழியாக சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications