"அந்த" போட்டோசை லீக் பண்ணிடுவேன்.. தற்கொலையில் முடிந்த "ரக்கட்" பாய் காதல்.. துடிதுடித்த மாணவி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வழக்கில் இளம்பெண்ணின் காதலன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை

தற்கொலை

கேரளாவின் கண்ணங்காடு பகுதியின் ஆலமிப்பள்ளியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் சமையல் ஆட்டோ ஓட்டுநராவார். இவருக்கு மினி என்கிற மனைவியும், நந்தா எனும் ஒரு மகளும் இருக்கின்றனர். மகள் நந்தா கல்லூரி பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (அக்.31) வீட்டின் ஜன்னலில் தூக்கிட்டவாறு நந்தா சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருந்த காவல்துறையினர் மாணவியின் காதலனை கைது செய்திருக்கிறார்கள்.

காதல்

காதல்

இது குறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, "சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து முதற்கட்டமாக நாங்கள் பிரேதத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தோம். மறுபுறம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், மாணவி கடைசியாக அப்துல் ஷுஹைப்(20) எனும் இளைஞன் ஒருவனிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்துள்ளார் என்பதை கண்டறிந்தோம். அந்த இளைஞனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த இளைஞனும் மாணவியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர்.

அந்தரங்க படங்கள்

அந்தரங்க படங்கள்

அப்போது மாணவியிடம் நெருக்கமாக பழகிய அப்துல் ஷுஹைப் சில அந்தரங்க புகைப்படங்களை கேட்டு பெற்றிருக்கிறார். இவ்வாறு இருக்கையில் இடையில் ஏதே சர்ச்சை மேலெழுந்துள்ளது. அப்துல் இயல்பிலேயே முரட்டு குணம் கொண்டவர் (ரக்கட் பாய்) என்பதால் அந்தரங்க படங்களை இணையத்தில் பதிவேற்றிவிடுவதாக மாணவி நந்தாவை மிரட்டி இருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தற்போது அப்துல் ஷுஹைபை கைது செய்திருக்கிறோம்.

சிறை

சிறை

இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் முழு உண்மையையும் கண்டறிவோம்" என்று கூறியுள்ளனர். தற்போது அப்துல் ஷுஹைப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக முற்போக்கு செயல்பாடுகளை முன்னெடுக்கும் கேரளாவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+