தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்?
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் வெல்ல வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கேரளாவைக் குறிவைத்து காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், அங்குக் காங்கிரஸுக்கு பல்வேறு சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. 6 பேர் முதல்வர் ரேஸில் இருப்பதால் அங்கு பெரும் சலசலப்பு இருக்கிறது.
கேரளாவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இல்லாததால் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் கேரளாவில் காங்கிரஸ் களமிறங்குகிறது. அதேநேரம் கேரளாவில் வென்றாலும் காங்கிரஸ் தலைவலி முழுமையாகத் தீர்ந்துவிடாது.

கேரளா
அங்கு வென்றால், யார் முதல்வர் என்ற கேள்வி இன்னும் அப்படியே இருக்கிறது. பல தலைவர்கள் முதல்வர் பதவிக்குக் குறி வைப்பதால், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கக் காங்கிரஸ் தலைமை தயக்கம் காட்டுகிறது.
இருப்பினும், இதில் கே.சி. வேணுகோபாலுக்கு வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக ராகுல் காந்தியின் ஆசி கே.சி. வேணுகோபாலுக்கே இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர். சமீபத்தில் கேரளாவில் காங்கிரஸ் வெளியிட்ட விளம்பர படத்திலும் வேணுகோபாலுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. இதை வைத்தே வேணுகோபால் தான் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார் எனப் பலரும் சொல்கிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவரான வேணுகோபால் கடந்த சில மாதங்களாகவே தேசிய அரசியலை விட்டுவிட்டு, கேரளாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிருப்தி தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.
கோஷ்டி பூசல்
மற்ற மாநிலங்களைப் போலவே கேரளாவிலும் காங்கிரஸில் பல்வேறு கோஷ்டி பூசல்கள் நிலவவே செய்கிறது. ஒவ்வொரு தலைவருக்கும் கணிசமான செல்வாக்கு இருக்கிறது. இதன் காரணமாகவே முதல்வர் வேட்பாளர் என ஒருவரை முன்னிறுத்த முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது. தற்போதைய சூழலில், கேரளாவில் முதல்வர் பதவிக்குக் குறைந்தது ஆறு பெயர்களாவது அடிபடுகின்றன.
மொத்தம் 6 பேர்
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஒரு முக்கியப் போட்டியாளர். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான வி.டி. சதிசனும் இந்த ரேஸில் புராதனமாக இருக்கிறார். மேலும், கே.சி. வேணுகோபாலுக்கு நெருக்கமானவராகவும் சதிசன் கருதப்படுகிறார். எனவே, அவருக்குக் கூடுதல் அட்வான்டேஜ் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. வேணுகோபாலுக்கு நேரடியாக முதல்வர் பதவி போகவில்லை என்றாலும் சதிசனுக்கு இது செல்ல வாய்ப்பு அதிகம்!
ஒரு கட்டத்தில், சசி தரூரின் பெயரும் முதல்வர் பதவிக்குப் பேசப்பட்டது. இருப்பினும், சமீப காலமாக அவரது செயல்பாடுகள் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அதேபோல டெல்லி தலைமைக்கும் சசி தரூர் மீது நம்பிக்கை இல்லையாம். இதனால் அவருக்கு இப்போது சான்ஸ் ரொம்பவே கம்மி.. கேரளா காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே. முரளீதரன் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
மவுனம்
இப்படி முதல்வர் வேட்பாளர் ரேஸில் பல தலைவர்கள் இருப்பதாலேயே காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கத் தயங்குகிறது. ஏற்கனவே, பஞ்சாபில் இதுபோலத் தான் தேர்தலுக்கு முன்பே சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக அறிவித்தது.. அங்குக் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு அதுவே காரணமாக இருந்தது. இதன் காரணமாகவே மீண்டும் முதல்வர் வேட்பாளரை அறிவித்து குட்டையை குழப்ப வேண்டாம் என காங்கிரஸ் நினைக்கிறது.
இப்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் சூழலில், அதில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் பிரதான கட்சியாகக் காங்கிரஸ் இல்லை.. அசாமில் பிரதான எதிர்க்கட்சியாகக் காங்கிரஸ் இருந்தாலும் பாஜக வெல்லவே வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது. புதுச்சேரியிலும் என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி கை தான் ஓங்கி இருக்கிறது. எனவே, காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைக்க வாய்ப்பு இருக்கும் ஒரே மாநிலமாகக் கேரளாவை மட்டுமே காங்கிரஸ் கருதுகிறது. இதன் காரணமாகவே முதல்வர் வேட்பாளர் என ஒருவரை அறிவித்துக் குழப்பத்தை ஏற்படுத்தக் காங்கிரஸ் விரும்பவில்லை.
கேரளா தலைவலி தீராது
மேலும், இடதுசாரிகள் அரசு மீது அதிருப்தி இருந்தாலும் காங்கிரஸ் அலை எல்லாம் அங்கு வீசவில்லை. பினராயி விஜயன் சாதாரண நபர் இல்லை.. அவரது தலைமைப் பண்புக்கு இன்னுமே வாக்குகள் இருப்பதாகவே சொல்கிறார்கள். பினராயி அரசைக் கடுமையாக விமர்சிப்போரும் கூட அவரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இதுவும் கூட காங்கிரஸ் கட்சி பினராயி விஜயனுக்கு எதிராக ஒரு முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தத் தயங்கக் காரணமாக இருக்கிறது.
கேரளாவில் காங்கிரஸ் தேர்வு செய்தாலும் கூட முதல்வர் தேர்வு அவ்வளவு ஈஸியாக இருக்காது. கர்நாடகாவிலாவது டிகே சிவக்குமாரை மட்டுமே சமாளிக்க வேண்டி இருந்தது. ஆனால், இங்குப் பலரைச் சமாளிக்க வேண்டி இருக்கும் என்பதால் வென்றாலும் கூட டெல்லி தலைமைக்குக் கேரளா தலைவலி சீக்கிரம் முடிவடைய வாய்ப்பில்லை.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ED கார் கண்ணாடி உடைப்பு.. சுற்றி வளைத்த தொண்டர்கள்.. பினராயி ரெய்டை முடித்தபோது வெடித்த பூகம்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications