காங்கிரஸுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்கும் போல.. கேரளாவில் வினோத பிரச்சனை.. தோல்வி உறுதி?
திருவனந்தபுரம்: நாட்டிலேயே மிகவும் முற்போக்கு மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய பிரச்சனை வந்துள்ளது. அங்கு இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடலாம் எனக் காங்கிரஸ் எதிர்பார்த்த சூழலில், யாருமே எதிர்பார்க்காத சிக்கல் வந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கேரளாவில் சட்டசபைத் தேர்தல் சூடுபிடித்துள்ளது. அங்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்தம் 140 தொகுதிகள் உள்ள சூழலில், 71 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். அங்குக் காங்கிரஸுக்கு இந்த முறை வெல்ல வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படும் சூழலில், புதிய பிரச்சனை வந்துள்ளது.

புதிய சிக்கல்
கேரளாவில் காங்கிரஸில் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமதுவின் கருத்துகள், அங்கு மிக முக்கிய விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது. கண்ணூர் சட்டமன்றத் தொகுதியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஷாமா எதிர்பார்த்துக் காத்திருந்தார். இருப்பினும், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மறுக்கப்பட்டாலும் தோற்கவில்லை" ('Denied But Not Defeated') எனப் பதிவிட்டிருந்தார். மேலும், கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஏன் குறைவாக உள்ளது என்பது குறித்து அவர் கடுமையான கேள்வியை எழுப்பினார். இதுவே அங்கு விவாதமாக மாறியுள்ளது.
அதிருப்தி
கேரளா தனித்துவ அரசியல் முரண்பாட்டுடன் திகழ்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கேரளாவில் 52% பெண்கள் உள்ளனர். இருந்தும், அனைத்துக் கட்சிகளிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் 10% க்கும் குறைவாகவே நீடிக்கிறது. பெண் உரிமைக்கா தொடர்ந்து பேசி வரும் காங்கிரஸின் பிரியங்கா காந்தி வத்ரா, கேரள எம்.பி. ஆனதால், அதிகமான பெண் வேட்பாளர்கள் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அங்குப் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கிறது.
கண்ணூரை பொறுத்தவரை அது காங்கிரஸின் கோட்டையாக இருந்த தொகுதி. 1987 முதல் 2011 வரை காங்கிரஸே அங்கு வென்றுள்ளது. இருப்பினும், கடந்த இரு தேர்தல்களில் அங்குக் காங்கிரஸ் (செக்யூலர்) என்ற பிராந்திய கட்சியே வென்றுள்ளது. அக்கட்சியின் கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருந்தார். இதனால் காங்கிரஸுக்கு மீண்டும் இந்த தொகுதியைக் கைப்பற்ற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
பலன் இல்லையா?
கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஷாமா முகமது கண்ணூரில் தொடர்ந்து களப்பணிகளை மேற்கொண்டார்.. அரசுப் பள்ளியைச் சீரமைத்தது முதல் பல வேலைகளைச் செய்தார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.. இது காங்கிரஸின் வேட்பாளர் தேர்வு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், கண்ணூர் என்பது முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகும். அப்படியிருக்கும் போது ஷாமா போன்ற களத்தில் இறங்கி வேலை செய்தவரை ஒதுக்குவது எந்த விதத்திலும் காங்கிரஸுக்கு லாபமாக இருக்காது என்கிறார்கள்.
அதேநேரம் இது வெறுமன ஷாமாவின் குற்றச்சாட்டு மட்டுமில்லை. அங்குக் காங்கிரஸிற்காக வேலை செய்யும் பெண் நிர்வாகிகள் பலரும் இதையே தான் சொல்கிறார்கள். தேசியளவிலும் மும்தாஜ் படேல், சிவசேனாவில் இணைந்த பிரியங்கா சதுர்வேதி, பாஜகவில் இணைந்த ராதிகா கேரா எனப் பலரும் காங்கிரஸ் தலைமை பெண் நிர்வாகிகளுக்குச் சரியாக வாய்ப்பு தரவில்லை என்றே குற்றஞ்சாட்டுகிறார்கள்.
பாஜக திட்டம்
இது காங்கிரஸுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் அமல்படுத்தி, அதன் மூலம் பெண் வாக்காளர்களை ஈர்க்க பாஜக திட்டம் போடும் சூழலில், இந்த குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸின் இமேஜை டேமேஜ் செய்வதாக இருக்கிறது.
கடந்த 2021 தேர்தலிலேயே பெண்கள் வாக்குகள் காங்கிரஸுக்கு வராததாலேயே காங்கிரஸால் வெல்ல முடியவில்லை. இந்த முறையும் எப்படியும் ஆட்சிக்கு எதிரான மனநிலை காரணமாக தங்களுக்கு வாக்குகள் வந்துவிடும் என்றே காங்கிரஸ் நம்பி இருந்தது. ஆனால், ஷாமாவின் அதிருப்தி குரல் காங்கிரஸின் பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. காங்கிரஸ் தனது பிரச்சினைகளை விரைந்து சரி செய்யவில்லை என்றால் மீண்டும் கேரளா கனவாகவே போக வாய்ப்புகள் அதிகம்.!
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மியூசிக்கிற்கு தடை.. பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம்.. தாலிபான்கள் போல் ரூல்ஸ் போட்ட கேரளா ஜிம் -
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்!












Click it and Unblock the Notifications