தீவிரமடையும் கொரோனா.. கேரளாவில் 3வதாக ஒருவருக்கு வைரஸ் தாக்குதல்.. உறுதி செய்த கேகே சைலஜா!
கேரளாவில் 3வதாக ஒருவருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் 3வதாக ஒருவருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. காசர்கோடு அருகே இளைஞர் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது சீனாவை தொடர்ந்து ஆசியாவின் பிற நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. தாய்லாந்தில் ஏற்கனவே இதனால் 18 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திபெத்தில் இதன் மூலம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியா, இந்தோனேசியாவில் மூன்று பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தனி அறையில் வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வைரஸ் எப்படி
இன்னொரு பக்கம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. பெங்களூர், கேரளா வரை வந்துவிட்டது. பெங்களூரில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. கேரளாவில் 9 பேருக்கு இதற்கான அறிகுறிகள் உள்ளது. இந்த 9 பேரை தற்போது தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். கேரளாவில் ஏற்கனவே இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவி எப்படி
முதலில் கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அங்கிருந்து கடந்த வாரம் கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. அதன்பின் இவர் சில வாரங்களுக்கு முன் சீனா சென்று வந்துள்ளார். பணி நிமித்தமாக சீனா சென்றுள்ளார். அதன்பின் இந்த வாரம் தொடக்கத்தில் அவர் இந்தியா வந்துள்ளார்.

தாக்குதல் என்ன
அதன்பின் இவருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது மூன்றாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. காசர்கோடு அருகே இளைஞர் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கேரளா மருத்துவர்களை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உறுதி
இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா அளித்த பேட்டியில், கேரளாவில் மூன்றாவது நபருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இவரும் சீனா சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 3 பேருக்கு இந்த தாக்குதல் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மூன்று பேரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications