2155 பேரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள்.. நிஃபாவை விட மோசம்.. கொரோனா பற்றி கேரளா அரசு வார்னிங்!
கொரோனா வைரஸ் கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு மிக மோசமான வைரஸ் தாக்குதலாக உருவெடுத்துள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்குதலுக்கு பிறகு மிக மோசமான வைரஸ் தாக்குதலாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக அங்கு மக்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவு கூடியது.
கேரளாவில் மூன்றாவது நபருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கேரளாவில் திருச்சூரை சேர்ந்த மாணவிக்கும், இன்னொரு மாணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டது.

தாக்குதல் அச்சம்
இந்த நிலையில் கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 2239 பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்டுகிறது. இதனால் இவர்கள் எல்லோரும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறார்கள். இதில் 2155 பேர் வீடுகளிலேயே வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களை வீட்டிற்கு வெளியே வர கூடாது என்று அம்மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. வீட்டிற்கு சென்று மருத்துவர்கள் இவர்களை சோதித்து வருகிறார்கள்.

எப்படி மருத்துவமனை
இது போக 84 பேர் கேரளாவில் மருத்துவமனையில் தனியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் இவர்கள் தனி அறையில் தீவிரமாக சிகிச்சை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு வைரஸ் தாக்குதல் அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் 40 பேர் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களை என்பது குறிப்பிடத்தக்கது. நோய் தாக்கிய மூன்று பேரில் 2 பேர் திருச்சூரை சேர்ந்தவர்கள்.

காசர்கோடு எப்படி
இதில் மூன்றாவது நபர் காசர்கோட்டை சேர்ந்தவர். இவருடன் பழகிய 80 பேரை அம்மாநில சுகாதாரத்துறை கண்டுபிடித்தது. இவர்களையும் கேரளா மருத்துவர்கள் சோதனை செய்து வருகிறார்கள். அதாவது நோய் தாங்கியவர் யாருடன் எல்லாம் பழகினார் என்பது லிஸ்ட் எடுக்கப்பட்டு, அவர்கள் எல்லோரையும் சோதனை செய்வது ஆகும் இது. இதற்கு காண்டாக்ட் டிரெஸ் முறை என்று பெயர். இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க வாய்ப்புகள் உள்ளது.

கேரள மக்கள்
அதேபோல் கேரளா முழுக்க மக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம். உணவு பொருட்களை அதிகமாக கொதிக்க வைத்து சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால்தான் கேரளாவில் தற்போது மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது வந்திருக்கும் கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட அங்கு பரவிய நிஃபா வைரஸ் போன்றதாகும். கேரளாவில் பரவி வந்த நிஃபா வைரஸ் காரணமாக, அங்கு மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏன் இப்படி
இதனால் ஒரு மாதத்தில் மொத்தமாக 17 பேர் இறந்து பலியானார். இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது என்று தெரியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வந்தனர். இந்த நிஃபா வைரஸ் அந்த மாநிலத்தையே உலுக்கியது. தற்போது அதற்கு இணையாகத்தான் இந்த வைரஸ் பரவி வருகிறது. அதனால்தான் தற்போது கேரளாவில் மாநில பேரிடர் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications