காசர்கோடு மட்டுமில்லை.. அண்டை மாவட்டங்களுக்கும் பரவுகிறது.. கேரளாவில் 138 பேருக்கு கொரோனா!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும் போல இன்றும் காசர்கோட்டில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் மொத்தம் 716 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க 18 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் ஒருவர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். இந்தியாவில் இனி வரும் நாட்களில் கொரோனா வேகம் எடுத்து தீவிரமாக பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளா நிலைய
இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விண்ணை தொட்டுள்ளது. அங்கு இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எப்போதும் போல இன்றும் காசர்கோட்டில்த்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்று மட்டும் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் மொத்தமாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் இடம்
இதனால் இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கேரளா முதல் இடம் பெற்றுள்ளது. கேரளாவில் அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 125 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அதில் 122 பேர் மருத்துவமனையில் உள்ளனர். ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

அதிக நபர்கள்
கேரளாவில் காசர்கோட்டில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தற்போது அருகிலேயே இருக்கும் கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு பரவி உள்ளது .காசர்கோடு மாவட்டத்தில் மூன்று பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருச்சூரில் இரண்டு பேருக்கும், இடுக்கி மற்றும் வயநாட்டில் தலா ஒருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது.

எத்தனை பேர் கண்காணிப்பு
கேரளாவில் இதுவரை 1,20,003 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். 1,01,402 பேர் வீட்டில் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அதேபோல் 601 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். 136 பேர் மருத்துவனையில் இன்று மட்டும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் காசர்கோட்டிற்கு அண்டை மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications