"ஹெட்மாஸ்டர்" இவர்தான்.. நடுவழியில் ஓவர் டார்ச்சர்.. அதிகாரியிடமே புகார் தந்த மாணவி.. தூக்கிய போலீஸ்
பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் கேரளாவில் கைதானார்கள்
திருவனந்தபுரம்: 11-ம் வகுப்பு மாணவிக்கு தொல்லை தந்த தலைமையாசிரியர் கைதாகி உள்ளார்.. பல்வேறு தேடுதல் வேட்டைகளுக்கு பிறகு, தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியர் சிக்கி உள்ளார்.
கேரள மாநிலம், எர்ணாக்குளத்தில் தனியார் பள்ளியில் கடந்த 16-ம் தேதி ஆண்டுவிழா நடந்தது.. ஆனால், அன்றைய தினம் இந்த நிகழ்ச்சி முடிய இரவு ஆகிவிட்டது...
நைட் நேரம் ஆகிவிட்டதால், அங்கிருந்த ஒரு பிளஸ் 1 மாணவியிடம், அந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கும் கிரண் கருணாகரன் என்பவர் பேச்சு தந்துள்ளார்..

லேட்நைட்
லேட்நைட் ஆகிவிட்டதால் இனி பஸ்கள் எதுவும் இருக்காது... அதனால், நானே உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு வந்து விட்டுவிடுகிறேன் என்று சொல்லி உள்ளார்.. தலைமை ஆசிரியரே இப்படி சொல்லவும், மாணவியும் அதற்கு சரி என்று கூறியுள்ளார்.. தன்னுடைய பைக்கில், மாணவியை ஏறச்சொல்லவும், மாணவியும், நம்பி ஏறி உட்கார்ந்தார்.. ஆனால் கிரண் கருணாகரன் வீட்டிற்கு செல்லும்வழியிலேயே பைக்கை நிறுத்திவிட்டு, மாணவிக்கு பாலியல் தொல்லை தர ஆரம்பித்துவிட்டார்..

மிட்நைட்
இதனால் நடுவழியில் அதிர்ச்சியில் உறைந்த மாணவி, என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளார்.. பிறகு, வீட்டுக்கு சென்றதுமே இதை பற்றி தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறார்.. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், மறுநாளே தலைமையாசிரியர் கிரண் கருணாகரனை சந்தித்து, கண்டித்தனர்.. எச்சரிக்கையும் விடுத்தனர்.. நடந்த சம்பவத்தை வீட்டில் சொல்லிவிட்டதால், கிரண் கருணாகரன் அதிர்ச்சி அடைந்தார்.. அதேசமயம் மாணவி மீது ஆத்திரம் கொண்டார்...

பிராக்டிக்கல் மார்க்
இந்த மாணவிக்கு வகுப்பெடுக்கும் 2 டீச்சர்களும் மாணவியிடம் மிரட்டல் விடுத்துள்ளனர்.. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் உன்னுடைய பிராக்டிகல் மார்க்கில் கைவைப்போம், பேசாமல் இப்படியே கண்டுகொள்ளால் விட்டுவிடு என்று அழுத்தம் தந்திருக்கிறார்கள்.. இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி, தன்னுடைய தோழிகளிடம் சொல்லி அழுதுள்ளார்.. கடைசியில் இந்த விஷயம், எர்ணாக்குளம் மாவட்ட கல்வி அலுவலகம்வரை தெரிந்துவிட்டது.. விஷயம் அவ்வளவு சென்றுவிட்டதால், மாணவிகள் சேர்ந்து இதுகுறித்து போலீசிலும் புகார் கொடுத்தனர்.

ஏகப்பட்ட கேஸ்கள்
அந்த புகாரின் அடிப்படையில், மாணவிக்கு மிரட்டல் விடுத்த 2 ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டனர்.. ஆனால், தலைமையாசிரியர் கிரண் கருணாகரன் மட்டும் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரை கேரள போலீஸார் தேடிவந்த நிலையில், இங்கே நாகர்கோவிலில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது... அதன் அடிப்படையில் நாகர்கோவில் வந்த கேரள போலீஸார், கிரண் கருணாகரனைக் கைது செய்தனர்.. அவரை போலீசார் எர்ணாகுளம் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.. இந்த தலைமை ஆசிரியருக்கு 43 வயதாகிறது.. இவர் மீது ஏற்கனவே இதுபோன்ற நிறைய புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications