கோச் டூ பக்கத்து வீட்டுக்காரர் வரை.. தலித் சிறுமியை பலாத்காரம் செய்த 64 பேர்.. கேரளாவில் கொடுமை
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் சிறுமி ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக கோச் முதல் பக்கத்து வீட்டுக்காரர்கள் வரை மொத்தம் 64 பேர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறியுள்ள சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் முதற்கட்டமாக 6 பேரை கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் 18 வயதை எட்டினார். அதற்கு முன்பு சிறுமியாக இருந்தார். இந்நிலையில் தான் மகிளா சமக்யா எனும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இளம்பெண் வசிக்கும் பகுதிக்கு சென்று ஃபீல்ட் விசிட் செய்தனர்.

அப்போது இளம்பெண்ணை சந்தித்து தொண்டு நிறுவனத்தினர் சந்தித்து பேசினர். அப்போது இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் அழைத்து சென்றனர்.
குழந்தைகள் நல கமிட்டியில் உள்ளவர்கள் இளம்பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். மனநல நிபுணர் அவரிடம் பேசி தைரியம் வழங்கினார். இந்த கவுன்சிலிங்கின்போது அவர் கூறிய தகவல் திடுக்கிட வைத்தது. அதாவது தலித் சமுதாயத்தை சேர்ந்த அந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக 64 பேர் மிரட்டி பாலியல் தொல்லை தந்துள்ளதாக அழுதபடி கூறினார். தனக்கு 13 வயது நிரம்பியதில் இருந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆபாசபடங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் பள்ளியில் படிக்கும்போது ஸ்போர்ட்ஸில் இருந்துள்ளார். இதனால் பொதுவெளியிலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், உள்ளூர்காரர்கள் என்று பலரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்து போன குழந்தைகள் நல கமிட்டி உடனடியாக பத்தனம்திட்டா போலீசில் புகார் அளித்தது. பத்தனம்திட்டா குழந்தைகள் நல கமிட்டியின் மாவட்ட தலைவர் ராஜீவ் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மொத்தம் 4 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்தனர். பாதிக்கப்பட்டவர் தற்போது 18 வயது நிரம்பி இளம்பெண்ணாக இருந்தாலும் கூட அவருக்கு நேர்ந்த கொடுமையின்போது சிறுமியாக இருந்தார். இதனால் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் இதையடுத்து உடனடியாக விசாரணை தீவிரப்படுத்திய போலீசார் 10 பேரை பிடித்து விசாரித்தனர். அதன்பிறகு 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் மற்ற 5 பேர் புதிதாக கைது செய்யப்பட்டனர். இதுபற்றி பத்தனம்திட்டா குழந்தைகள் நல கமிட்டியின் மாவட்ட தலைவர் ராஜீவ் கூறுகையில், ‛‛இந்த வழக்கு என்பது ரொம்ப சீரியஸானது. சிறுமி 8 ம் வகுப்பு படிக்கும்போதே பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளார். சிறுமி விளையாட்டில் மிகவும் ஆர்வமாக கொண்டவர். பொது வெளியில் வைத்தும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது'' என்று வேதனைப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவை அதிர வைத்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications